Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெரிய பவுலர்களால் கூட முடியவில்லை.. கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழக வீரர்!

துபாய் : தமிழக வேகப் பந்துவீச்சாளர் டி நடராஜன் ஐபிஎல் களத்தில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார்.

Recommended Video

தமிழக வீரரை பார்த்தும் நடுங்கும் ஜாம்பவான்கள்.. அசத்தும் Natarajan

2020 ஐபிஎல் சீசனில் சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

அவர் பங்கேற்றுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை சார்ந்தே பந்துவீச்சு திட்டத்தை செயல்படுத்தும் நிலையில் உள்ளது.

யார்க்கர்

யார்க்கர்

டி20 போட்டிகளில் யார்க்கர் பந்துவீச்சு கடினமானது. ஆனால், யார்க்கர் பந்து வீசும் பந்துவீச்சாளர்கள் டி20 போட்டிகளில் எளிதாக ஆதிக்கம் செலுத்த முடியும். பும்ராஅதற்கு ஒரு நல்ல உதாரணம். அந்த வகையில் தமிழக வீரர் டி நடராஜன் யார்க்கர் மட்டுமே வைத்து ஐபிஎல்-இல் கலக்கி வருகிறார்.

கட்டுக் கோப்பாக வீசி வருகிறார்

கட்டுக் கோப்பாக வீசி வருகிறார்

ஹைதராபாத் அணியில் சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், கலீல் அஹ்மது இருந்தாலும், அவர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். ஆனால், நடராஜன் கட்டுக் கோப்பாக பந்து வீசி வருகிறார். விக்கெட்டும் வீழ்த்தி வருகிறார்.

பாராட்டு

பாராட்டு

அவரது பந்துவீச்சை கண்டு பல வெளிநாட்டு வீரர்கள் பாராட்டி உள்ளனர். கடினமான யார்க்கர் பந்துவீச்சை அனாயசமாக அவர் வீசி வருவதை சுட்டிக் காட்டி பாராட்டி உள்ளனர். குறிப்பாக டெத் ஓவர்களில் அவரது பந்துவீச்சு அபாரமாக உள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

தமிழ்நாடு மாநில அணியில் கூட அதிக வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையில் ஐபிஎல் தொடரில் 2017இல் வாய்ப்பு பெற்றார் நடராஜன். அந்த சீசனில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்த நிலையில், 2018, 2019 சீசன்களில் வெளியே அமர வைக்கப்பட்டார்.

இந்திய அணியில்..

இந்திய அணியில்..

ஆனால், விதியின் விளையாட்டாக 2020 ஐபிஎல் தொடரில் அந்த அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக மாறி உள்ளார். ஐபிஎல் தொடரின் மூலமே கிரிக்கெட் உலகை வியக்க வைத்துள்ள அவருக்கு, இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் பெரிய சாதனைகள் செய்வார்.

Story first published: Thursday, October 8, 2020, 20:45 [IST]
Other articles published on Oct 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+