For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் ஒரு ஸ்கோரா? 7.5 ஓவரில் சேஸிங்கை முடித்த ட்ரெயில்பிளேசர்ஸ்.. வெலாசிட்டி பாவம்!

ஷார்ஜா : வெலாசிட்டி அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ட்ரெயில்பிளேசர்ஸ்.

மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இரண்டாவது போட்டியில் வெலாசிட்டி - ட்ரெயில்பிளேசர்ஸ் அணிகள் மோதின.

வெலாசிட்டி அணி முதலில் பேட்டிங் செய்து 47 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த இலக்கை ட்ரெயில்பிளேசர்ஸ் அணி 7.5 ஓவரில் எட்டியது.

டாஸ் வெற்றி

டாஸ் வெற்றி

மகளிர் டி20 சேலஞ்ச் என்றும் சிறிய டி20 தொடரை ஐபிஎல் தொடருக்கு நடுவே நடத்தி வருகிறது பிசிசிஐ. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டியில் வெலாசிட்டி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி துவக்கம் முதலே விக்கெட்களை இழந்து தவித்தது.

மிரட்டல் பந்துவீச்சு

மிரட்டல் பந்துவீச்சு

27 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது அந்த அணி. ஷபாளி வர்மா 13 ரன்கள் எடுத்ததே அந்த அணியில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் ஆகும். சோபியின் மிரட்டல் சுழற் பந்துவீச்சில் 4 விக்கெட்கள் வீழ்ந்தன. ஜுலன் கோஸ்வாமி 2, ராஜேஸ்வரி 2 விக்கெட் வீழ்த்தினர்.

ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா

48 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி ஆடியது ட்ரெயில்பிளேசர்ஸ் அணி. அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். எனினும், டாட்டின் மற்றும் ரிச்சா கோஷ் கூட்டணி அமைத்து சேஸிங்கை வெற்றிகரமாக முடித்தனர்.

வெற்றி

வெற்றி

7.5 ஓவரில் ட்ரெயில்பிளேசர்ஸ் அணி 49 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 9 விக்கெட் வித்தியாசத்தில் வெலாசிட்டி அணியை வீழ்த்தியது ட்ரெயில்பிளேசர்ஸ் அணி. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பெற்றது ட்ரெயில்பிளேசர்ஸ்.

Story first published: Thursday, November 5, 2020, 20:01 [IST]
Other articles published on Nov 5, 2020
English summary
IPL 2020 VEL vs TRL : Trailblazers won by 9 wickets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+