
வெலாசிட்டி பேட்டிங்
இந்தப் போட்டியில் வெலாசிட்டி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மிதாலி ராஜ் கேப்டனாக இருக்கும் வெலாசிட்டி அணிக்கு ஷபாளி வர்மா - டேனியல் வியாட் துவக்கம் அளித்தனர். டேனியல் நிதான ஆட்டம் ஆடினார்.

கோஸ்வாமி தந்த திருப்பம்
3வது ஓவரில் ஷபாளி வர்மாவை வீழ்த்தி கோஸ்வாமி முதல் திருப்பத்தை ஏற்படுத்தினார். அதன் பின் இங்கிலாந்து வீராங்கனை சோபி தன் சுழற் பந்துவீச்சு மூலம் வெலாசிட்டி அணியை திக்குமுக்காட வைத்தார். மிதாலி ராஜ் 1, வேதா கிருஷ்ணமூர்த்தி 0, சுஷ்மா வர்மா 1 என வரிசையாக விக்கெட்கள் சரிந்தது.

சோபி மிரட்டல்
சோபி தன் சுழற் பந்துவீச்சின் மூலம் 4 விக்கெட்களை சாய்த்தார். கோஸ்வாமி 2 விக்கெட்களும், ராஜேஸ்வரி 2 விக்கெட்களும் வீழ்த்தினர். ஒரு கட்டத்தில் வெலாசிட்டி அணி 27 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

47 ரன்னுக்கு ஆல் அவுட்
வெலாசிட்டி ஆணி 15.1 ஓவர்களில் 47 ர அங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மிக பரிதாப நிலையில் காட்சி அளித்தது வெலாசிட்டி அணி. 48 ரன்கள் என்ற சிறிய இலக்கை 7.5 ஓவர்களில் எட்டியது ட்ரெயில்பிளேசர்ஸ் அணி.

பயிற்சி தான் காரணம்
தன் சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய சோபி லாக்டவுனில் விடாமல் பயிற்சி செய்தது இப்போது பலன் அளித்துள்ளது என்றார். மேலும், சேஸிங் துவங்கும் முன்பே அவர் 8 ஓவர்களில் இந்த இலக்கை நாங்கள் எட்டி விடுவோம் என்றார்.

யார் இந்த சோபி?
இங்கிலாந்து அணியின் இளம் சுழற் பந்துவீச்சாளரான சோபி எக்கிளேஸ்டோன் டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அவரை சமாளிக்க முடியாமல் வெலாசிட்டி அணி படுதோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications