For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எங்கப்பா தோனி பெயரையே காணோம்? மானத்தை காப்பாற்றிய சிஎஸ்கே.. நம்பர் 1 இடத்தில் சச்சின்.. என்னங்க இது?

மும்பை : சமீபத்தில் நடந்து முடிந்த 2020 ஐபிஎல் தொடரின் முடிவில் சமூக வலைதளத்தை கட்டி ஆண்ட வீரர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதே போல எந்த அணியை பற்றி ரசிகர்கள் அதிகம் பேசி உள்ளனர், எந்த நிகழ்வு ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது போன்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

தோனி இல்லை

தோனி இல்லை

சச்சின் போட்ட ஒரு ட்வீட் தான் அதிகம் பகிரப்பட்ட, லைக் செய்யப்பட்ட பதிவாக முதல் இடத்தை பிடித்துள்ளது. வழக்கமாக தோனி தான் அதிகம் பேசப்பட்ட வீரராக இருப்பார். அவரை முந்தி இருக்கிறார் மற்றொரு நட்சத்திர வீரர்.

ட்விட்டர்

ட்விட்டர்

கிரிக்கெட் போட்டிகளின் போது சமூக வலைதளமான ட்விட்டர் தான் அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக உள்ளது. போட்டியில் நடக்கும் ஒவ்வொரு நொடி நிகழ்வும் ட்விட்டரில் ரசிகர்களால் பேசப்படும். அதே போல, வீரர்களை அதிகம் விமர்சனம் செய்யும் களமாகவும் ட்விட்டர் தான் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

2020 ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் அதிகம் பயன்படுத்திய வீரர்கள், அணிகள் உள்ளிட்ட தகவல்களை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. எட்டு ஐபிஎல் அணிகளில் அதிகம் பேசப்பட்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தை பிடித்தது. பெங்களூர் அணி இரண்டாம் இடத்தையும், கோப்பை வென்ற மும்பை மூன்றாம் இடத்தையும் பிடித்தன.

விராட் கோலி

விராட் கோலி

வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் தோனி தான் அதிகம் பேசப்பட்ட வீரராக இருப்பார் ஆனால், இந்த முறை அவர் மோசமான பார்மில் இருந்ததாலும், சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் அவர் இடத்தை பிடித்துள்ளார் விராட் கோலி.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

அவர் பேட்டிங் முதலில் மோசமாக இருந்து பின் பார்முக்கு வந்தது. அதன் பின் பெங்களூர் அணியை சரியாக வழிநடத்தாத காரணத்தால் அவர் மீது கடும் விமர்சனம் எழுந்தது. இந்த காரணங்களால் அவரைப் பற்றி அதிகம் பேசப்பட்டது. அவர் முதல் இடத்தை பிடித்தார்.

ஐந்து தருணங்கள்

ஐந்து தருணங்கள்

இந்த ஐபிஎல் தொடரில் ரசிகர்களை ஈர்த்த தருணம் நிக்கோலஸ் பூரன் பிடித்த நம்ப முடியாத அந்த கேட்ச், கிறிஸ் கெயில் நீண்ட இடைவெளிக்கு பின் போட்டியில் ஆடத் துவங்கிய தருணம், கேஎல் ராகுல் 132 ரன்கள் எடுத்தது, முகமது சிராஜ் 2 மெய்டன் ஓவர்கள் மற்றும் 3 விக்கெட்கள் வீழ்த்தியது, தினேஷ் கார்த்திக் கேப்டன் பதவியை இயான் மார்கனுக்கு விட்டுக் கொடுத்தது ஆகியவை தான்.

சச்சின் டெண்டுல்கர் பதிவு

சச்சின் டெண்டுல்கர் பதிவு

நிக்கோலஸ் பூரன் பிடித்த கேட்ச்சை சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பதிவாக வெளியிட்டு இருந்தார். தன் வாழ்க்கையிலேயே பந்தை இத்தனை சிறப்பாக தடுத்து நான் முதல் முறையாக பார்க்கிறேன் என அவர் கூறி இருந்தார். அந்த பதிவை 216,600 பேர் லைக் செய்தனர். அது தான் கோல்டன் ட்வீட் ஆக முதல் இடத்தை பிடித்துள்ளது.

சிஎஸ்கேவின் ஆதிக்கம்

சிஎஸ்கேவின் ஆதிக்கம்

முதல் 10 ஹேஷ்டேக்கில் சிஎஸ்கேவின் ஆதிக்கம் அதிகம். #IPL2020 முதல் இடத்தை பிடித்துள்ளது. #Whistlepodu, #CSK, #yellove ஆகியவை அடுத்த மூன்று இடங்களை பிடித்துள்ளது. அந்த அளவுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.

Story first published: Wednesday, November 18, 2020, 21:03 [IST]
Other articles published on Nov 18, 2020
English summary
IPL 2020 : Virat Kohli beat Dhoni in twitter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X