Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈரமா இருக்கு அதான்.. கோலி செய்த காரியம்.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

துபாய் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் விராட் கோலி.

ஆம், அந்த அணியின் கேப்டன் விராட் கோலி, பீல்டிங்கில் மீண்டும், மீண்டும் செய்த தவறால் தான் பஞ்சாப் அணி 200 ரன்களை கடந்தது.

207 ரன்கள் என்ற பெரிய இலக்கை எட்ட முடியாமல் பெங்களூர் அணி அழுத்தத்தில் விக்கெட்களை இழந்து படுதோல்வி அடைந்தது. கோலியால் தான் இந்த தோல்வி என்பதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் முடிவிலேயே தவறு செய்தது. சேஸிங் செய்வது இந்த ஐபிஎல் சீசனில் நடந்த போட்டிகளில் கடினமானதாக இருந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் கோலி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் அதிரடி

பஞ்சாப் அதிரடி

பஞ்சாப் அணி துவக்கம் முதலே அதிரடியாக ரன் குவித்து வந்தது. மயங்க் அகர்வால் 26, நிக்கோலஸ் பூரன் 17, மேக்ஸ்வெல் 5 ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். எனினும், துவக்க வீரர் ராகுல் நிலைத்து நின்று ரன் குவித்து வந்தார்.

கேஎல் ராகுல் ஆட்டம்

கேஎல் ராகுல் ஆட்டம்

முதலில் ஃபோர் மட்டுமே அடித்து வந்தவர் கடைசி இரண்டு ஓவர்களில் விளாசித் தள்ளினார். 69 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். அவர் 84 ரன்களிலும், 90 ரன்களிலும் இரண்டு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். அப்போது மட்டும் ராகுல் ஆட்டமிழந்து இருந்தால் போட்டி வேறு மாதிரி ஆகி இருக்கக் கூடும்.

கேட்ச் வாய்ப்பு

கேட்ச் வாய்ப்பு

84 ரன்கள் அடித்த நிலையில் ராகுல், 17வது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்தார். அந்த கேட்ச் கொஞ்சம் சிரமம் என்றாலும், கோலி போன்ற சிறந்த பீல்டருக்கு அது எளிதான கேட்ச் தான். ஆனால், கோலி அதை தவறவிட்டு ஏமாற்றம் அளித்தார்.

மீண்டும் தவறவிட்டார்

மீண்டும் தவறவிட்டார்

மீண்டும் 18வது ஓவரின் கடைசி பந்திலும் உயர அடித்து கேட்ச் கொடுத்தார் ராகுல். அப்போதும் பந்து கோலி பக்கத்தில் வந்தது. அவர் பந்தை பிடிக்க முடியாமல் சொதப்பி நழுவ விட்டார். பந்தை தவறவிட்டுவிட்டு, சால்ஜாப்பாக பந்து பனிப்பொழிவு காரணமாக ஈரமாக இருக்கிறது என்று சைகை காட்டினார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

சிறந்த பீல்டர்களில் ஒருவராக அறியப்படும் விராட் கோலி, மற்ற வீரர்கள் கேட்ச்சை விட்டு விட்டால் அவர்களை கடுமையாக திட்டும் கேப்டன் விராட் கோலி, இரண்டு கேட்ச்களை அடுத்தடுத்த ஓவரில் வரிசையாக தவறவிட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ராகுல் ஆட்டம்

ராகுல் ஆட்டம்

அந்த வாய்ப்பை பயன்படுத்தி ராகுல் கடைசி இரண்டு ஓவர்களில் 26 மற்றும் 23 ரன்கள் குவித்து வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சினார். பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. கோலி அந்த கேட்ச்சை பிடித்து இருந்தால் 180 ரன்களுக்குள் தான் பஞ்சாப் எடுத்து இருக்கும் என விமர்சகர்கள் கூறினர்.

படுதோல்வி

படுதோல்வி

207 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி சேஸிங் செய்த பெங்களூர் அணி பதற்றத்தில் வேக வேகமாக விக்கெட்களை இழந்து படுதோல்வி அடைந்தது. 109 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆகி 97 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இது பெங்களூர் அணியின் நெட் ரன் ரேட்டையும் கடுமையாக பாதித்துள்ளது.

Story first published: Friday, September 25, 2020, 12:20 [IST]
Other articles published on Sep 25, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+