Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டன் கோலி, பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ்.. சரமாரி கேள்வி!

மும்பை : ஆன்லைன் ஃபேன்டசி சூதாட்டத்துக்கு எதிரான வழக்கில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2020 ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனின் டைட்டில் ஸ்பான்சராக ஆன்லைன் சூதாட்ட செயலி ஒன்று தான் உள்ளது.

அதே போல, இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியா ஸ்பான்சர்களில் ஒன்றாக மற்றொரு ஆன்லைன் விளையாட்டு சூதாட்ட செயலி இடம் பெற்றுள்ளது.

சூதாட்டங்கள்

சூதாட்டங்கள்

இந்த நிலையில், விளையாட்டுக்களை வைத்து நடைபெறும் ஆன்லைன் சூதாட்டங்களின் எண்ணிக்கை பல மடங்காக பெருகி வருகிறது. அதனால், சிலர் தற்கொலை செய்து கொள்வதாகக் கூட செய்திகள் வெளியாகி வருகின்றன. இன்ன நிலையில், இதற்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

வழக்கு

வழக்கு

பலரும் ஆன்லைன் சூதாட்டங்களை எதிர்த்து வழக்கு தொடர்ந்து வருகின்றனர். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட இது தொடர்பான வழக்கு ஒன்றில் விராட் கோலி மற்றும் சவுரவ் கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட செயலி

ஆன்லைன் சூதாட்ட செயலி

இருவரும் ஆன்லைன் சூதாட்ட செயலியின் விளம்பரத்தில் தோன்றி அதற்கு ஆதரவாக விளம்பரம் செய்ததற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு மட்டுமின்றி பிரகாஷ் ராஜ், தமன்னா, ராணா, சுதிப் கான் உள்ளிட்ட நடிகர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சரமாரியாக கேள்வி

சரமாரியாக கேள்வி

இது தொடர்பான விசாரணையின் போது மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஆன்லைன் சூதாட்ட செயலியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் பெயர்களும் மற்றும் சில செயலிகளில் மாநிலங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் மாநிலங்களுக்காகவா விளையாடுகிறார்கள்? என அவர்கள் கேட்டனர்.

கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள்

கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள்

மேலும், சூதாட்ட செயலிகளின் முதலாளிகள் பிரபலங்களின் பெயர்களை பயன்படுத்தி கோடிகளை சம்பாதித்து வருகிறார்கள் என்றனர். நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிரபலங்கள் அனைவரும் நவம்பர் 19க்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

விராட் கோலிக்கு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன் சென்னை வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது வழக்கு தொடர்ந்து இருந்தார். அப்போதும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

Story first published: Tuesday, November 3, 2020, 23:17 [IST]
Other articles published on Nov 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+