Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படி என்ன கோபமோ.. அந்த வார்த்தையை சொல்லி சிஎஸ்கே வீரர்களை விளாசிய சேவாக்!

துபாய் : முன்னாள் வீரர் சேவாக் சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் மூத்த வீரர்கள் இரண்டு சிறுவர்களிடம் ஹைதராபாத் போட்டியில் தோல்வி அடைந்தாக கூறிய அவர், சிஎஸ்கே வீரர்கள் முட்டாள்கள் என்றும் கூறி கடுமையை காட்டி உள்ளார்.

2௦20 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. முதல் போட்டியில் மட்டுமே வென்ற அந்த அணி அடுத்ததாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதனால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பெரும் வெற்றிடம்

பெரும் வெற்றிடம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாததால் பெரும் வெற்றிடம் ஏற்பட்டது. அத்துடன் இந்த தொடரில் ஆடத் துவங்கியது சிஎஸ்கே அணி. ஆனால், முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. ஆனால், அடுத்த மூன்று போட்டிகளில் ஒரே மாதிரி சேஸிங்கில் சொதப்பி தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணியின் திட்டங்கள் அனைத்தும் கேள்விக்குள்ளானது.

என்ன செய்தது சிஎஸ்கே?

என்ன செய்தது சிஎஸ்கே?

டாப் ஆர்டர் வீரர்கள் நிதான ஆட்டம் ஆடி முதல் 10 ஓவர்களில் பந்துகளை வீணடித்தனர். அடுத்து தோனி பேட்டிங் ஆட வரும் போது ரன் ரேட் தேவை அதிகமாக இருக்கும் அவர் தன் பங்குக்கு டாட் பால் ஆடி ரன் தேவையை ஓவருக்கு 20 ரன்களுக்கும் மேல் அதிகரிப்பார். அதன் பின் தோனி சில சிக்ஸ் அடிப்பார். சிஎஸ்கே அணி தோல்வி அடையும்.

சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி

சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி

ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என மூன்று அணிகளுக்கு எதிராகவும் சிஎஸ்கே அணி இதே போலவே ஆடி சேஸிங் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த பின் ஹைதரபாத் போட்டியில் சிஎஸ்கே மீளும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

சிஎஸ்கே மாற்றம்

சிஎஸ்கே மாற்றம்

காரணம், சிஎஸ்கே அணியில் அம்பதி ராயுடு, டிவைன் பிராவோ ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர். மேலும், போட்டியில் சிஎஸ்கே அணி பந்துவீச்சில் துவக்கத்தில் அபாரமாக செயல்பட்டது. 11 ஓவர்களில் ஹைதராபாத் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தி 69 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் சிக்க வைத்தது.

இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

அப்போது ப்ரியம் கார்க் - அபிஷேக் சர்மா என இரண்டு இளம் வீரர்கள் பேட்டிங் செய்து வந்தனர். அவர்களை வீழ்த்த முடியாமல் திணறியது சிஎஸ்கே. ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணிக்கு இது சிக்கலாக மாறியது.

தோனி ஆட்டம் எப்படி?

தோனி ஆட்டம் எப்படி?

சேஸிங்கில் மீண்டும் பழைய பல்லவியை அப்படியே செயல்படுத்தி சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. ஜடேஜா அதிரடியாக 50 ரன்கள் எடுத்தார். தோனி அதிரடியாக 47 ரன்கள் எடுத்தாலும் அவர் வெற்றிக்காக அந்த ரன்களை அடித்தது போல இல்லை.

வீரேந்தர் சேவாக் விமர்சனம்

வீரேந்தர் சேவாக் விமர்சனம்

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தோல்வியை விமர்சனம் செய்த வீரேந்தர் சேவாக், இந்தப் போட்டி தோனியின் மூளைக்கும், வார்னரின் பலத்துக்கும் இடையே நடந்தது. ஆனால், ஹைதராபாத் அணி வெறும் பலத்தை வைத்து சிஎஸ்கே அணியை வீழ்த்தியது என்றார்.

சிறுவர்கள் அடித்து வீழ்த்தினார்கள்

சிறுவர்கள் அடித்து வீழ்த்தினார்கள்

மேலும், ஹைதராபாத் அணியின் முதல் நான்கு முக்கிய வீரர்கள் விக்கெட்களை வீழ்த்திய உடன் சிஎஸ்கேவின் சீனியர்கள், இந்த இரண்டு சின்னப் பசங்க என்ன செய்யப் போகிறார்கள்? என நினைத்து இருப்பார்கள். ஆனால், அந்த சிறுவர்கள் தான் சிஎஸ்கே அணியை அடித்து வீழ்த்தினார்கள் என்றார் சேவாக்.

முட்டாள்களாகி இருக்கிறார்கள்

முட்டாள்களாகி இருக்கிறார்கள்

சென்னை அணி கூலான அணுகுமுறைக்கு பெயர் போனது. ஆனால், இப்போது அவர்கள் தங்களின் திட்டத்தில் தாங்களே மாட்டிக் கொண்டு முட்டாள்களாகி இருக்கிறார்கள். ஹைதராபாத் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதா? அல்லது சிஎஸ்கே அணி வலைப் பயிற்சி செய்ததா? என கேள்வி எழுப்பி உள்ளார் சேவாக்.

கேலி, கிண்டல்

கேலி, கிண்டல்

சிஎஸ்கே வீரர்களை "முட்டாள்கள்" என்ற வார்த்தையை பயன்படுத்தி சேவாக் விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. சிஎஸ்கே அணியை சேவாக் தொடர்ந்து கடுமையாக கேலி, கிண்டல் செய்து விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, October 3, 2020, 22:17 [IST]
Other articles published on Oct 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+