For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ப்பா டிவில்லியர்ஸுக்கு இவ்ளோ ஆக்ரோஷமா....பயிற்சியின் போது ஐபோனை உடைத்தார்...காரணம் & வீடியோ இதோ

சென்னை: ஐபிஎல் போட்டிக்காக தயாராகி ஆர்.சி.பி வீரர் டிவில்லியர்ஸ் பயிற்சியின் போது ஐபோனை உடைத்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் உலாவி வருகிறது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில் பயிற்சியின் போது அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் ஆக்ரோஷத்தால் ஐபோனை உடைத்துள்ளார்.

ஏப்ரல் 9

ஏப்ரல் 9

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ள மும்பை அணிக்கும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணிக்கு போட்டி நடைபெறுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

ஐபில் தொடர் தொடங்குவதற்கு முன்னரே ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளன. அந்தவகையில் பெங்களூரு அணியின் 360 டிகிரி ப்ளேயர் டிவில்லியர்ஸும் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் வலைப்பயிற்சியின் போது ஐபோனை பவுலிங் எண்டில் வைத்து தனது பேட்டிங்கை வீடியோ பதிவு செய்துள்ளார். அப்போது அவர் அடித்த பந்து வேகமாக வந்து ஐபோனை உடைத்து நாசமாக்கியுள்ளது. இதுகுறித்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தீவிரம்

தீவிரம்

ஐபிஎல்-ல் தன் அதிரடிக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ள டிவில்லியர்ஸ், 169 போட்டிகளில் ஆடி 4849 ரன்களை குவித்துள்ளார். அதே போல கடந்த சீசனில் மட்டும் 15 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 454 ரன்களை விளாசியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆர்.சி.பி அணிக்காக தனது அதிரடியை காட்டும் டிவில்லியர்ஸ் இந்தாண்டும் சிக்ஸர் மழை பொழிவார் என ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

ஆர்.சி.பி பலம்

ஆர்.சி.பி பலம்

இந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்றே தீர வேண்டும் என களம் காணவுள்ள ஆர்.சி.பி அணியில் பலமான வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பேட்டிங்கில் மேலும் வலுசேர்க்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல், மற்றும் பந்துவீச்சில் பலம் சேர்க்க நியூசிலாந்து வீரர் கெயிலி ஜேமிசனை அணியில் எடுத்துள்ளனர். இதனால் இந்தாண்டு ஆர்.சி.பி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Thursday, March 11, 2021, 21:31 [IST]
Other articles published on Mar 11, 2021
English summary
RCB Player AB De Villiers Smashes IPhone During Training Session for IPL 2021
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+