Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல நாட்களாக ஓய்வெடுத்த வீரருக்கு முன்னுரிமை... ரிஸ்க் எடுக்கும் பஞ்சாப் அணி... ஏன் இவ்வளவு மவுசு

பஞ்சாப்: ஐபிஎல் தொடருக்காக முக்கிய வீரரை அணிக்குள் களமிறக்கி ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் அணிக்கான வியூகங்களை தயார் செய்து வருகின்றது.

இந்நிலையில் பஞ்சாப் அணி பல கோடிக்கு எடுக்கப்பட்ட வீரர்களை விட கண்டுக்கொள்ளாமல் பல நாட்களாக விளையாடாமலேயே இருந்த வீரருக்காக ரிஸ்க் எடுத்து வருகிறது.

எந்த வீரர்

எந்த வீரர்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு தற்போது நினைவில் இருந்து சற்று மறந்திருக்கும் பெயர் முகமது ஷமி. டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டி என இந்திய அணியில் முக்கிய வீரராக திகழ்ந்த இவர், கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு விலகினார். அதன் பின்னர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலாக விளையாடாமல் இருக்கும் ஷமி, நேரடியாக ஐபிஎல் 2021-க்கு ரெடியாக இருப்பதாக கிங்ஸ் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார், அதுவும் பல கோடிகளுக்கு வாங்கப்பட்ட வீரர்கள் இருக்கையில், முதல் போட்டியிலேயே முகமது ஷமி களமிறக்கப்படுவாராம்.

எப்படி தயார்

எப்படி தயார்

இதுகுறித்து பேசியுள்ள அனில் கும்ளே, எனக்கு தெரிந்த வரையில் ஷமி ரெடியாகிவிட்டார். சில நாட்களில் அணியின் பபுலில் இணைந்துவிடுவார். அவர் சமீபத்தில் எந்த போட்டியிலும் ஆடவில்லை என்றாலும் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அவருக்காக அணி எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. சில பயிற்சி ஆட்டங்களில் ஆடிவிட்ட நேரடியாக முதல் போட்டிக்கே அவரை களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

கிங்ஸ் பஞ்சாப் அணியில் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட ஜெயி ரிச்சர்ட்ஸன், ரைலி மெரிடித், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் உள்ளனர். எனவே இவர்களுடன் முகமது ஷமி சேர்ந்த்து அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல்-ல் இதுவரை 63 இன்னிங்ஸுகளில் பந்துவீசியுள்ள முகமது ஷமி, 60 விக்கெட்களை எடுத்துள்ளார்.

Story first published: Saturday, March 27, 2021, 18:14 [IST]
Other articles published on Mar 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+