Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உள்ளே வரும் புதிய வீரர்கள்.. மொத்தமாக மாறும் சூழ்நிலை.. திடீரென தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் ஏலம்.. ஏன்?

டெல்லி: 2021 ஐபிஎல் தொடருக்கான ஐபிஎல் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்ற விவரங்களும் வெளியாகி உள்ளது.

2021 ஐபிஎல் தொடர் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடக்க உள்ளது.

ஏலத்திற்கு முன்பாக 8 ஐபிஎல் அணிகளும் வெளியேற்றும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இன்னும் பல அணிகளுக்கு இடையே தொடர்ந்து டிரேடிங் நடந்து வருகிறது.

டிரேடிங்

டிரேடிங்

நேற்று கூட ராஜஸ்தான் அணியில் இருந்து ராபின் உத்தப்பா சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டார். முன்னதாக அடுத்த மாதம் 11ம் தேதி ஐபிஎல் ஏலம் நடக்க உள்ளதாக கூறப்பட்டது.சென்னையில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் ஏலம் நடக்கும் என்று கூறப்பட்டது.

எப்போது

எப்போது

முதல் டெஸ்டிற்கும், இரண்டாவது டெஸ்டிற்கும் இடையில் இந்த ஏலம் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது 2021 ஐபிஎல் தொடருக்கான ஐபிஎல் ஏலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்ற விவரங்களும் வெளியாகி உள்ளது.

காரணம்

காரணம்

அதன்படி தற்போது ஏலம் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் நடக்கலாம் என்று கூறுகிறார்கள். ஏலம் ஒருவாரம் தள்ளி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 2021 ஐபிஎல் தொடரில் பல புதிய வீரர்கள் இணைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். மேத்யூ வேட் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் தொடங்கி பல புதிய வீரர்கள் ஐபிஎல்லிற்குள் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

பதிவு

பதிவு

இந்த வீரர்கள் பலர் இன்னும் தங்கள் பெயர்களை ஐபிஎல் தொடருக்கு பதிவு செய்யவில்லை. அதேபோல் சையது முஷ்டாக் கோப்பையில் அறிமுகம் பெற்று அதிரடி காட்டிய பல இளம் வீரர்கள் இன்னும் ஐபிஎல் தொடருக்கு பதிவு செய்யவில்லை.

 ஏலம் தேதி

ஏலம் தேதி

இதனால் இவர்களுக்கு நேரம் கொடுக்கும் வகையில் ஐபிஎல் ஏலம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் அணிகள் சில இது தொடர்பாக கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இப்போது ஏலம் வேண்டாம் ஒரு வாரம் தள்ளி வையுங்கள் என்று அணிகள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

Story first published: Friday, January 22, 2021, 19:48 [IST]
Other articles published on Jan 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+