கோலிக்கு அணிக்குள்ளயே இப்படி ஒரு பக்தனா...ஆர்சிபி வீரரின் செண்டிமெண்ட் ஆசை....ரசிகர்கள் நெகிழ்ச்சி
சென்னை: ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக களமிறங்கும் அறிமுக வீரர் அசாருதீன், தனக்கு பிடித்த வீரர் குறித்து கூறியிருப்பது நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் அதிரடி காட்டிய இளம் வீரர் அசாருதீனுக்கு ஐபிஎல்-ல் ஆர்.சி.பி அணி வாய்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் தனது முதல் ஐபிஎல் தொடரில் எப்படி ஆடப்போகிறேன் என அவர் கூறியிருப்பது நெகிழ வைத்துள்ளது.

அசாருதீன்
கேரளா கிரிக்கெட் அணியை சேர்ந்தவர் முகமது அசாருதீன். சஞ்சு சாம்சனின் சக வீரரான இவர், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையது முஷ்டக் கோப்பையில் மும்பைக்கு எதிராக 54 பந்துகளில் 137 ரன்கள் விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வந்த இவர் ஐபிஎல்-ல் பங்கேற்க கடந்த 5 ஆண்டுகளாக போராடி வந்தார்.

ஏலம்
26 வயதாகும் அசாருதீனை ஐபிஎல் போட்டியில் ஏலம் எடுக்க நிச்சயம் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை எந்த அணியும் முதலில் கண்டுக்கொள்ளாமலேயே இருந்தது. இறுதியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரின் ஆரம்ப விலையான ரூ.20 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது.

பயமே இருக்க கூடாது
ஐபிஎல் குறித்து பேசியுள்ள அவர், எனக்கு கிரிக்கெட்டில் மிகவும் பிடித்த, என் முன்னுதாரணமான விராட் கோலியுடன் சேர்ந்து விளையாட வேண்டும் என்ற கனவு நிஜமாக போகிறது. இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்பதும் என் ஆசை. ஆனால் எனது தற்போதைய ஆசை, ஆர்.சி.பி அணியில் கோலியை போல நானும் அச்சமின்றி ஆட வேண்டும். எனது ஃபார்மை கடைபிடிக்க வேண்டும். இந்த சீசன் எனக்கு கற்றுக்கொள்ளக்கூடிய சீசனாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

ஓப்பனர்
மேலும் பேசிய அவர், எனக்கு இந்த ஐபிஎல் சீசனில் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். எனக்கு அப்படி வாய்ப்பு கிடைத்தால் தேவ்தத் படிக்கலுடன் சேர்ந்த ஓப்பனிங்கில் களமிறங்க வேண்டும். எனினும் அணி நிர்வாகம் என்னை எந்த ஆர்டரில் களமிறங்கினாலும் நான் விளையாட தயார் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications