Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதுக்கு வம்பு.. நம்ம ரூல்ஸ்படியே போவோம்....மும்பைக்கு ஷிஃப்ட் ஆகும் சிஎஸ்கே... ரசிகர்கள் ஏமாற்றம்!

சென்னை: ஐபிஎல் தொடரி மைதானங்கள் தேர்வு குறித்து சர்ச்சை எழுந்து வரும் நிலையில் சி.எஸ்.கே, பஞ்சாப் அணிகள் ரூல்ஸ் படி போவோம் என தங்களது வேலைகளை செய்துகொண்டிருக்கிறது.

14வது ஐபிஎல் தொடர் கடந்த முறை அயல்நாட்டில் நடைபெற்ற நிலையில் இந்த முறை இந்தியாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அணிகளுக்கு ஹோம் அட்வாண்டேஜ் கொடுக்கப்படவில்லை.

இதனால் ஏற்கனவே ஹோம் மைதானத்தில் பயிற்சியை தொடங்கியுள்ள அணிகள், பயிற்சியை வேறு இடத்திற்கு மாற்ற ஆயத்தமாகியுள்ளது.

ஏப்ரல் 9

ஏப்ரல் 9

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மே 30ம் தேதி நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

ஐபில் தொடர் தொடங்குவதற்கு முன்னரே ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளன. அதன்படி சி.எஸ்.கே அணி நேற்று முதல் சென்னையில் பயிற்சியை தொடங்கியது. இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்னால் பயிற்சி முகாமை மும்பைக்கு மாற்ற அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கொரோனா காரணமாக இந்த முறை மொத்தமாக 6 மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் 4 மைதானங்களில் விளையாடும். இதில் அனைத்து அணிகளுக்கும் பொதுவான இடத்திலேயே ஆட்டங்கள் நடைபெறும். எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது. எனவே சென்னை அணி தனது முகாமை மும்பைக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. சி.எஸ்.கே அணியின் முதல் போட்டி மும்பையில்தான் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 பஞ்சாப் கிங்ஸ்

பஞ்சாப் கிங்ஸ்

இதே போல கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பயிற்சி முகாமை மும்பைக்கு கொண்டு செல்லவுள்ளது. பஞ்சாபின் மொஹாலியில் இந்த முறை ஒரு போட்டி கூட நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் மும்பையில் பஞ்சாப் அணியின் பயிற்சி முகாம் தொடங்கப்படும் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி சதீஸ் மேனன் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 10, 2021, 16:58 [IST]
Other articles published on Mar 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+