Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாரத்தானுக்கு தயாராகும் சி.எஸ்.கே வீரர்கள்.... இப்படிபட்ட பயிற்சியா தராங்க.... பயிற்சியாளர் பதில்!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சும் அதற்கான பயிற்சிகள் குறித்தும் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் குறித்து அந்த அணியின் சமூக வலைதள பக்கங்களில் அன்புடன் டைரீஸ் என வீடியோ வெளியாகி வருகிறது. அதில் அணி குறித்த அப்டேட்கள் விடப்படும்.

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வீடியோவில் சி.எஸ்.கே அணியின் பயிற்சி குறித்து பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜி பகிர்ந்துள்ளார்.

 சென்னை அணி

சென்னை அணி

இந்தாண்டுகான ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி தொடங்குகிறது. இதற்காக கடந்த மார்ச்9ம் தேதி முதல் சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வந்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் அதனை மும்பைக்கு மாற்றியது. கடந்த சீசனில் ப்ளே ஆஃப்-க்கு கூட செல்லாததால் இந்த முறை தீவிர பயிற்சியில் வீரர்கள் இரங்கியுள்ளனர்.

பாலாஜி

பாலாஜி

இந்நிலையில் அணியின் பயிற்சி குறித்து பவுலிங் பயிற்சியாளர் லட்சுமி பாலாஜி பதிலளித்துள்ளார். அதில் அவர், ஐபிஎல் என்பது ஒரு மாரத்தானை போட்டி போல, எனவே 400 மீ, 200மீ ஓட்டம் போல இல்லாமல், வீரர்கள் 6 -8 வாரங்களுக்கு ஓட வீரர்கள் உடலை தயாராக்க வேண்டும். சி.எஸ்.கே வீரர்கள் அவர்களின் உடல்நிலை நன்கு பார்த்துக்கொள்கிறார். எனவே அவர்களின் ஆட்டத்தை எதிர்பார்த்து உள்ளோம்.

திறமை

திறமை

வீரர்களின் ஃபார்ம் குறித்து பேசிய பாலாஜி, சி.எஸ்.கே வீரர்கள் ஏற்கனவே அவர்கள் சிறந்த வீரர்கள் என நிரூபனம் செய்தவர்கள். அவர்களின் திறமையில் ஒரு சந்தேகமும் இல்லை. வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த சீசனில் தங்களது 100% ஆட்டத்தை அணிக்காக வெளிப்படுத்த காத்துள்ளனர். அப்படிப்பட்டவர்களுடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் ஏற்கனவே 15 நாட்கள் சென்னையில் மேற்கொண்ட பயிற்சி முகாம் மிகவும் உதவியாக இருந்தது என தெரிவித்தார்.

சி.எஸ்.கே போட்டிகள்

சி.எஸ்.கே போட்டிகள்

தற்போது மும்பையில் முகாமிட்டுள்ள சி.எஸ்.கே அணி, அங்கு 5 போட்டிகளில் விளையாடவுள்ளது. முதலாவதாக ஏப்.10ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. அதன் பின்னர் ஏப்.16ம் தேதி பஞ்சாப் கிங்ஸ், ஏப்.19ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப்.21 கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஏப்ரல் 25ம் தேதி பெங்களூரு அணிகளுடன் மோதவுள்ளது.

Story first published: Tuesday, March 30, 2021, 18:50 [IST]
Other articles published on Mar 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+