Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த தடவ வெறித்தனமான ஆட்டம் இருக்கு... தோனிய இதுக்கு முன்ன இப்படி பார்த்து இருக்கீங்களா - வீடியோ!

சென்னை: ஐபிஎல் தொடருக்காக சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனியின் வெறித்தனமான பயிற்சி வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த முறை அதிரடி மன்னன் எம்.எஸ்.தோனி பயிற்சியின் போது பந்தை செதறிடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஏப்ரல் 9

ஏப்ரல் 9

14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மே 30ம் தேதி நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. சென்னை அணிக்கு முதல் போட்டியை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான மும்பையில் ஆடவுள்ளது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

ஐபில் தொடர் தொடங்குவதற்கு முன்னரே ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கின. அதன்படி சி.எஸ்.கே அணி கடந்த 9ம் தேதி முதல் சென்னையில் பயிற்சியை தொடங்கியது. இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்னால் பயிற்சி முகாமை மும்பைக்கு மாற்ற அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

வெறித்தனம்

வெறித்தனம்

இந்நிலையில் கேப்டன் எம்.எஸ்.தோனி தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை அந்த அணி சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளது. கடந்த முறை பெரிய அளவில் சோப்பிக்காமல் விமர்சனங்களுக்கு உள்ளான தோனி இந்த முறை அதிரடி காட்ட முடிவெடுத்துவிட்டார் போல் தோன்றுகிறது. ஏனென்றால் அந்த வீடியோ அவர் வெறித்தனமாக சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். அதே போல் க்ரவுண்ட் ஷாட்களுக்காகவும் பயிற்சி எடுத்துள்ளார்.

பார்க்க முடியாது

பார்க்க முடியாது

கொரோனா காரணமாக இந்த முறை ஐபிஎல் தொடருக்கு 6 மைதானங்களே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் எந்த அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கொடுக்கப்படாமல் பொது இடங்களிலேயே போட்டிகள் நடைபெறவுள்ளன. இதனால் எம்.எஸ்.தோனி ஆட்டத்தை சி.எஸ்.கே ரசிகர்கள் பெரிய அளவில் மிஸ் செய்வார்கள் எனக்கூறப்படுகிறது. மேலும் தோனியின் கடைசி ஐபிஎல் இதுவாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாவதால் ரசிகர்கள் சோகமாகியுள்ளனர்.

Story first published: Friday, March 12, 2021, 13:36 [IST]
Other articles published on Mar 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+