Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த வயசுல யாராலையும் முடியாது... தோனியின் கர்ஜனை மீண்டும் ஒலிக்குமா.. என்ன சொல்கிறார் பயிற்சியாளார்

சென்னை: சி.எஸ்.கே அணியில் ஒருவார பயிற்சிக்கு பின்னர் தோனியின் எப்படி உள்ளது என பயிற்சியாளர் மனம் திறந்துள்ளார்.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சி எடுத்து வரும் நிலையில் தோனியின் பக்கம்தான் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

பயிற்சி தொடங்கி ஒருவாரம் ஆன நிலையில் சி.எஸ்.கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி வரும் ஐபிஎல் தொடருக்கு பக்காவாக ரெடியாகி வருவதாக பயிற்சியாளர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

பயிற்சி

பயிற்சி

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வரும் ஏப் 10ம் தேதி எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக கேப்டன் எம்.எஸ்.தோனி, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். கடந்த முறை சென்னை அணி படுதோல்வி சந்தித்ததால் இந்த முறை மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமர்சனம்

விமர்சனம்

கடந்த ஆண்டு தோனிக்கு பேட்டிங்கிலும் சரி, கேப்டன்சியிலும் சரி விமர்சனங்கள் அடுத்தடுத்து விழுந்தது. குறிப்பாக ஐபிஎல் முதல் முறையாக தோனி கடந்த சீசனில் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக அவர் 200 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். மேலும் அவருக்கு 40 வயது எட்டவுள்ளதால் அவரின் ஆட்டம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்தன.

எப்படி தயாராகிறார்

எப்படி தயாராகிறார்

இதுகுறித்து பேசியுள்ள அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ராஜீவ் குமார், தோனி எவ்வளவு ஸ்மார்டான நபர் என்பது நமக்கு தெரியும். அவரின் உடல்நிலை மற்றும் ஆட்டம் குறித்து அவர் நன்றாக புரிந்து வைத்துள்ளார். இந்த வயதிலும் பந்தை சரியாக கையாள்கிறார். எல்லோராலும் அப்படி செய்துவிட முடியாது. இதை காண மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு முறையும் பயிற்சிக்கு வரும் தோனி, ஆட்டம் குறித்து ஒரு புதிய திட்டத்துடன் வருகிறார். நாங்கள் அதுகுறித்து ஆலோசித்து வருகிறோம் என தெரிவித்தார்.

ராயுடு

ராயுடு

தோனிக்கு அடுத்து அணியில் மிக முக்கிய வீரரான அம்பத்தி ராயுடுவும் பயிற்சியில் பங்கேற்றுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் கடைசியாக முஷ்டக் அலி கோப்பையில் ஆடினேன். கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்துள்ளதால் பழைய ஃபார்முக்கு வர கொஞ்சம் காலம் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, March 16, 2021, 18:02 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+