Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிய மிஞ்சிட்டார்....தனிப்பட்ட ஆசையில் கூட சி.எஸ்.கேவின் வெற்றி பற்றிய யோசனை.. இப்படி ஒரு ப்ளேயரா!

சென்னை: தனது சொந்த ஆசையில் கூட சென்னை அணியின் வெற்றியை பற்றி யோசித்துள்ளார் ராபின் உத்தப்பா.

2021 ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. சென்னை அணி வழக்கம் போல மூத்த வீரர்களை வைத்து அதிரடி காட்ட ஆயத்தம் ஆகி வருகிறது.

அந்தவகையில் சி.எஸ்.கேவால் மூத்த வீரர் ராபின் உத்தப்பா வாங்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர், தான் சென்னை அணிக்காக செயல்படுவது குறித்து கேட்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

சி.எஸ்.கே ஏலம்

சி.எஸ்.கே ஏலம்

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக இவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. குறிப்பாக கடந்த 2 சீசன்களிலும் அவர் 300 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட ரூ.3 கோடிக்கே சி.எஸ்.கே அவரை வாங்கியது.

விருப்ப அணி

விருப்ப அணி

இந்நிலையில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் உத்தப்பாவிடம் அவர் எந்த அணியை எதிரிகொள்ள எதிர்பார்த்திருப்பதாக கேட்கப்பட்டது. அதற்கு அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடவும், அந்த அணிக்கு எதிராக சிறப்பாக ஆடவும் காத்துள்ளேன். நடப்பு சாம்பியனை வீழ்த்தினால் அனைவருக்கும் சென்னை அணியின் பலம் குறித்து தெரிந்துவிடும் என கூறினார்.

ஆசை

ஆசை

உங்களது தனிப்பட்ட ஆசை என்ன? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து உத்தப்பா, இந்த முறை சென்னை அணி மீண்டு வரவேண்டும் என்ற நோக்கில் உள்ளது. எனவே முடிந்தவரை நான் சி.எஸ்.கேவுக்கு நிறைய போட்டிகளில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதே ஆசை எனத்தெரிவித்தார்.

 அதிக ரன்கள்

அதிக ரன்கள்

மேலும் அவர், ஒரு ஐபிஎல் சீசனில் 1000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை இந்தாண்டு படைக்க வேண்டும் என உத்தப்பா ஆசை தெரிவித்துள்ளார். உத்தப்பா அதிகபட்சமாக 2014ம் ஆண்டு ஐபிஎல்-ல் 660 ரன்களை அடித்துள்ளார். இதுவரை ஒரு ஐபிஎல் சீசனில் அதிகபட்சமாக விராட் கோலி 973 ரன்கள் குவித்துள்ளதே சாதனையாக உள்ளது.

ஐபிஎல்-ல் உத்தப்பா

ஐபிஎல்-ல் உத்தப்பா

ஐபிஎல் போட்டியில் கடந்த 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராபின் உத்தப்பா 4607 ரன்களை குவித்துள்ளார். சென்ன சூப்பர் கிங்ஸ், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் 6வது அணியாகும். இவர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மொத்தம் 377 ரன்கள் அடித்து அத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அதே போல் தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டி ஒன்றிலும் ஓப்பனராக களமிறங்கி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Story first published: Tuesday, March 30, 2021, 16:22 [IST]
Other articles published on Mar 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+