Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிடில் ஆர்டருக்காக தனி கவனம்.. இறுதிப்போட்டிக்காக தோனி வகுத்த வியூகம்.. சிஎஸ்கேவின் ப்ளேயிங் 11!

அமீரகம்: ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சுரேஷ் ரெய்னா விளையாடுவாரா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது.

லீக் மற்றும் ப்ளே ஆஃப் சுற்றுகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

 ஐபிஎல் இறுதிப்போட்டி

ஐபிஎல் இறுதிப்போட்டி

ஐபிஎல் வரலாற்றில் இந்த இரண்டு அணிகளுமே கோப்பையை வென்றவை ஆகும். சென்னை அணி இதுவரை 3 முறையும், கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. இதே போல ஐசிசி கோப்பைகளையே வென்றுக் கொடுத்த தோனி - இயான் மோர்கன் கேப்டன்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிஎஸ்கே மாற்றங்கள் என்ன?

சிஎஸ்கே மாற்றங்கள் என்ன?

எனினும் இந்த இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி, சிஎஸ்கேவை விட சற்று கை ஓங்கியுள்ளது. அமீரகத்தில் சென்னை அணி சிறிய சறுக்கல்களை சந்தித்தபோதும், கொல்கத்தா அணி தொடர்ந்து வெற்றி பாதையை கூர்மை படுத்திக்கொண்டே வந்துள்ளது. வாழ்வா? சாவா? என்ற இரண்டு ஆட்டங்களிலும் ஆர்சிபி, டெல்லி என இரண்டு வலுவான அணிகளை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு களமிறங்கியுள்ளது. எனவே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் ப்ளேயிங் 11 என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தோனியின் திட்டம்

தோனியின் திட்டம்

இந்நிலையில் ப்ளேயிங் 11-க்காக தோனி போட்டு வைத்துள்ள திட்டம் தெரியவந்துள்ளது. தோனியை பொறுத்தவரை எப்போதுமே வெற்றி அணியை பெரியளவில் மாற்றமாட்டார். வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார். எனினும் இது முக்கியப்போட்டியாக இருப்பதால் தனி கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் பேட்டிங்கில் தான் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டு வருகிறார். ஏனென்றால் கொல்கத்தா அணியின் பந்துவீச்சு படு சிறப்பாக அமைந்துள்ளது.

மிடில் ஆர்டரில் கவனம்

மிடில் ஆர்டரில் கவனம்

எவ்வளவு சிறப்பான தொடக்கத்தை ஒரு அணி கொடுத்தாலும், மிடில் ஓவர்களில் கொல்கத்தா சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. சென்னை அணியே ஒருமுறை கொல்கத்தாவிடம் அடிவாங்கியுள்ளது. எனவே மிடில் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில் சுரேஷ் ரெய்னா கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொயீன் அலி சொதப்புவதால், அவருக்கு பதிலாக ரெய்னா கொண்டு வரப்படலாம். மற்றபடி வேறு எந்த மாற்றமும் இல்லை.

சிஎஸ்கே ப்ளேயிங் 11

சிஎஸ்கே ப்ளேயிங் 11

ருதுராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ், ரெய்னா, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஹாசல்வுட்

Story first published: Thursday, October 14, 2021, 18:15 [IST]
Other articles published on Oct 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+