Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு வந்த மோசமான சூழல்.. கேகேஆர் அணியை சமாளிப்பதில் பல அடுக்கு சிக்கல்கள்.. எப்படி சமாளிக்கலாம்!

அமீரகம்: கொல்கத்தா அணியை எதிர்கொள்வதில் தோனி பல்வேறு விஷயங்களுக்கு திட்டம் வகுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடைபெற்ற லீக் மற்றும் குவாலிஃபையர் சுற்றின் முடிவில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டியானது, துபாயில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டி

ஐபிஎல் இறுதிப்போட்டி

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லியை வீழ்த்தி என்னதான் சிஎஸ்கே அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றாலும், கொல்கத்தாவை அவ்வளவு எளிதாக தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அமீரகத்தில் சிஎஸ்கே சரிவை கண்டபோதும், கொல்கத்தா அணி தொடர்ந்து தனது பலத்தை அதிகரித்துக்கொண்டே வருகிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக ப்ளே ஆஃப்-க்கு நுழைந்த போதும்,வலுவான ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளை ஊதி தள்ளிவிட்டது.

கேகேஆர் அணி

கேகேஆர் அணி

இப்படி ஒரு வலுவான கம்பேக்கிற்கு அந்த அணியில் அனைத்து துறைகளிலும் இருக்கும் சில வீரர்கள் மட்டுமே காரணம். அதனை தோனி எப்படி சமாளிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளை போட்டியில் சிஎஸ்கே மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டியது பேட்டிங் ஆர்டரை தான். ஏனென்றால் கொல்கத்தா அணி எதிர்பார்காத பவுலிங் ஆற்றலை கொண்டுள்ளது.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் ஜோடி சிறப்பாக உள்ளது. என்னதான் டூப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் ஆகியோர் முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் சேர்த்தாலும் கூட இறுதியில் 140 ரன்கள் மட்டுமே அதிகபட்சம் எடுக்க முடிகிறது. ஏனென்றால், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் ஆகிய இருவரும் மிடில் ஓவர்களில் முக்கிய விக்கெட்களை சாய்த்து விடுகின்றனர். எனவே சிஎஸ்கே அணி தனது மிடில் ஆர்டர் பேட்டிங்கை வலுப்படுத்தி வருகிறது.

சிஎஸ்கே பவுலிங்

சிஎஸ்கே பவுலிங்

இதே போல பவுலிங்கிலும் சென்னை அணி கவனம் கொள்ள வேண்டும். கொல்கத்தா அணியின் ஓப்பனிங் ஜோடி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் குறைந்த 40+ ரன்கள் என துவம்சம் செய்கிறார். எனவே அவரை சமாளிப்பதற்காகவே தோனி தனித்திட்டம் போட வேண்டும். இதே போல மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி, ராணா, சுனில் நரேன், தினேஷ் கார்த்திக் என பெரும் படையே உள்ளது. குறிப்பாக அடுத்தப் போட்டியில் ஆண்ட்ரே ரஸல் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இதனால் தோனி பெரும் சவால் நாளை காத்துள்ளது.

Story first published: Thursday, October 14, 2021, 20:03 [IST]
Other articles published on Oct 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+