உங்க கம்பேக்கை எதிர்பார்த்தோம் . ஆனா இப்படி வருவீங்கனு எதிர்பார்க்கல..துறவியான தோனி... காரணம் என்ன?
சென்னை: இந்திய அணியின் முன்னாள் வீரர் தோனி, மொட்டை போட்டுக்கொண்டு துறவியாக உள்ள புகைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்காக தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் எம்.எஸ்.தோனி தீடீரென மொட்டையடித்துக் கொண்டு தாடியை ஷேவ் செய்துகொண்டு துறவி போன்று மாறியுள்ளார்.
தோனி ஸ்டெய்ல்
இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனி எப்போதும் தனது லுக்ஸை வெளிப்படுத்திக்கொள்வதில் ட்ரெண்ட் செட்டராக இருப்பார். அவர் ஒவ்வொருமுறையும் தனது லுக்ஸில் செய்யும் சேஞ்ச் அவரது ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது. ஃபங்க் வைத்துக்கொண்டது, உலகக்கோப்பையை வென்றவுடன் மொட்டையடித்துக்கொண்டது, டெயில் விடுவது போன்றவை தோனியின் ஃபேமஸ் லுக்ஸ் ஆகும்.

நியூ லுக்
இந்நிலையில் தோனி வரும் ஐபிஎல் தொடரில் எதுபோன்ற ஹேர்ஸ்டெயிலில் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அவர் தலையில் ஹேரே இல்லாமல் மொட்டையுடனும், தாடியை க்ளீன் ஷேவும் செய்துள்ளார். அந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் தோனிக்கு என்னாச்சு என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

பின்னணி
இதற்கான உண்மையான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் விளம்பரத்திற்காக தோனி இதுபோன்று கெட்டப் போட்டுள்ளார். மேலும் அவர் துறவி போன்று பேசும் வீடியோவையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதில், எனது மந்திரத்திற்கு பின்னால் உள்ள ரசிகசியம் விரைவில் தெரியவரும்' என கூறியுள்ளார். விளம்பரத்திற்காக இப்படியா செய்வது என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

சென்னை அணி
சென்னை அணி கடந்த முறை படு தோல்வியை சந்தித்ததால் இந்த முறை தோனி தலைமையில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை அணி தனது முதல் போட்டியாக வரும் ஏப்.10ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications