Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா அடி சாமி... பயிற்சியிலேயே அதிரடி காட்டிய ரிஷப் பண்ட்... தோனிக்கு தலைவலி நிச்சயம் - வீடியோ!

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் வலைப்பயிற்சியில் ஆக்ரோஷத்துடன் பந்தை நாளாபுறமும் சிதறடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. கடந்த முறை இறுதிப்போட்டி வரை சென்ற டெல்லி அணி இந்த முறை கோப்பையை வெல்ல ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் டெல்லி அணியின் புதிய கேப்டன் பண்ட், பயிற்சியின் போது காட்டியுள்ள ஆக்ரோஷம், டெல்லி அணியின் பலத்தை காட்டியுள்ளது.

 ஹாட் டாப்பிக்

ஹாட் டாப்பிக்

இந்த வருட ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளாலும் அதிகம் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக் ரிஷப் பண்ட் தான். ஆஸ்திரேலியா மாற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் அவர் காட்டிய அதிரடிதான் அதற்கு காரணம். பற்றாகுறைக்கு இந்த முறை ஸ்ரேயாஷ் ஐயர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியதால் டெல்லி அணிக்கு புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டனாக அவர் எப்படி செயல்படுவார் என அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

சவால்

சவால்

டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்-க்கு முதல் போட்டியே சவால் நிறைந்த ஒன்றாக அமைந்துள்ளது. வரும் ஏப்10ம் தேதி டெல்லி தனது முதல் போட்டியாக சென்னையை எதிர்கொள்கிறது. மிகவும் அனுபவம் வாய்ந்த தோனி தலைமையிலான அணியை இளம் வீரர் ரிஷப் பண்ட் கேப்டன்சியில் டெல்லி அணி எதிர்த்து ஆடவுள்ளது. இதனால் இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தனது கேப்டன்சி திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

 ஆக்ரோஷம்

ஆக்ரோஷம்

இந்நிலையில் அதற்காக ரிஷப் பண்ட் தீவிரமாக தயாராகி வரும் வீடியோ ஒன்றை டெல்லி அணி வெளியிட்டுள்ளது. அதில் ரிஷப் பண்ட், இங்கிலாந்து தொடரில் விட்ட ஆக்ரோஷத்தை அப்படியே ஐபிஎல்-க்கு எடுத்து வருவது போல அதிரடி காட்டியுள்ளார். பயிற்சியாளர் பாண்டிங்கின் ஆலோசனை மற்றும் வீரர்களின் உற்சாகத்துடன் அவர் நாளாபுறமும் பந்துகளை சிதறடித்து வருகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தோனி

முன்னதாக முதல் போட்டி குறித்து பேசிய ரிஷப் பண்ட், கேப்டனாக எனது முதல் போட்டியில் எம்.எஸ்.தோனியை எதிர்கொள்வது மிகப்பெரிய அனுபவத்தை கொடுக்கும். அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். ஒரு ப்ளேயராக எனது தனிப்பட்ட அனுபவத்தையும், தோனியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்களையும் சி.எஸ்.கேவுக்கு எதிரான போட்டியில் பயன்படுத்துவேன் எனத்தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 7, 2021, 9:40 [IST]
Other articles published on Apr 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+