Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கு சவால் விடுத்த டிவில்லியர்ஸ்... தீவிர பயிற்சியில் விராட் கோலி.... அப்படி என்ன ஆச்சு?

பெங்களூரு: ஐபிஎல் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில் விராட் கோலி மற்றும் ஏ.பி.டிவில்லியர்ஸ் தங்களுக்குள் சவால் விடுத்துள்ளனர்.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் பெங்களூரு அணியில் கேப்டன் கோலிக்கும் அதிரடி வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸுக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.

வீரர்கள் வருகை

வீரர்கள் வருகை

ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதால் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அணிக்குள் திரட்டி வருகிறது. அயல்நாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருகை தந்து பயிற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அந்தவகையில் ஆர்.சி.பி அணி இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற முடிவுடன் களமிறங்கவுள்ளது. இந்த அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.

ஆர்.சி.பி

ஆர்.சி.பி

பெங்களூரு அணி நேற்று முதல் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. இதற்காக ஏ.பி.டிவில்லியர்ஸ் இந்தியாவுக்கு கிளம்பிவிட்டார். அதே போல மேக்ஸ்வெல், கெயில் ஜேமிசன் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் வருகை தருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துடனான தொடர் கடந்த 28ம் தேதியன்றே முடிவடைந்து விட்டது. இதனால் விராட் கோலியும் ஏப்.1ம் தேதி தேதியன்று ஆர்.சி.பி அணிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலியின் சவால்

கோலியின் சவால்

இதனிடையே அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏ.பி.டிவில்லியர்ஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில் விராட் கோலியின் ஃபார்ம் பிடித்துள்ளது. ஆர்.சி.பி அணியில் இணைய அனைத்தும் தயார் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு ரிப்ளை செய்த கோலி, டிவில்லியர்ஸ் நீங்கள் இன்னமும் ரன் எடுக்க ஓடுவதில் வேகமாக இருப்பீர்கள் என நம்புவதாக பதிவிட்டார். கோலியின் இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள டிவில்லியர்ஸ், நாளை இருவரும் ஓடி போட்டி போட்டு பார்ப்போம், தெரிந்துவிடும் என சவால் விடுத்துள்ளார்.

தீவிர பயிற்சி

தீவிர பயிற்சி

ட்வில்லியர்ஸ் போட்டி போட அழைத்த நிலையில் விராட் கோலி, மும்முரமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஓய்வு நாட்களே கிடையாது. இனி எல்லாமே ஐபிஎல்-காக தான் என குறிபிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலியும் டிவில்லியர்ஸும் 2011ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக சேர்ந்து ஆடுகின்றனர். அவர்களிடையே போட்டியை காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Tuesday, March 30, 2021, 16:23 [IST]
Other articles published on Mar 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+