
தேதி
14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கும் எனவும் தொடரின் இறுதி போட்டி அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மே 30ம் தேதி நடைபெறும் எனவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

அணிகளுக்கு செக்
கொரோனா காரணமாக இந்த முறை மொத்தமாக 6 மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. லீக் போட்டியில் ஒவ்வொரு அணியும் 4 மைதானங்களில் விளையாடும். இதில் அனைத்து அணிகளுக்கும் பொதுவான இடத்திலேயே ஆட்டங்கள் நடைபெறும். எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் கிடையாது. பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ஹோம் அட்வாண்டேஜ் குறித்து முறையிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ரசிகர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் ரசிகர்களை அனுமதிப்பது தொடர்பாக பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோனி முக்கியமா?
தோனி, தன் கடைசி ஐபிஎல் தொடரை சென்னையில் விளையாடுவதை பிசிசிஐ தடுப்பதாகவும், ரசிகர்களுக்கு அனுமதி இல்லாத போது போட்டி சென்னை அணி சென்னையிலும், மும்பை அணி மும்பையிலும் ஆடினால் என்ன? பல அணிகள் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதனை அறிந்த சி.எஸ்.கே ரசிகர்கள் தோனிக்கு ஆதரவாக ட்வீட்களை தெறிக்கவிட ஆரம்பித்தனர்.

இணைய போர்
இந்நிலையில் இதற்கு எதிராக சில கிரிக்கெட் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ஐபிஎல்-ஐ விட தோனி முக்கியமில்லை. ரசிகர்களுக்கு அனுமதியில்லாதபோது தோனி தன் கடைசி ஆட்டத்தை எங்கு விளையாடினால் என்ன? ஒரு தொடரை விட ஒரு தனிப்பட்ட வீரர் என்றும் முக்கியமானவர் அல்ல,இது முட்டாள்தனமான கருத்து என அவர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











