Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு சீக்கிரமாவா... அனைத்து வீரர்களையும் ஒன்றினைக்கும் கொல்கத்தா அணி... எதுக்கு இந்த திட்டம்?

மும்பை: ஐபிஎல் தொடருக்காக வெளிநாட்டில் இருந்து அதிரடி வீரர்களை களமிறக்கி பயிற்சியை தொடங்கியுள்ளது கொல்கத்தா அணி.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக சென்னை உள்ளிட்ட சில அணிகள் பயிற்சியை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அணியின் முக்கிய வீரர்களுடனும், அயல் நாட்டு அதிரடி வீரர்களையும் கொண்டு பயிற்சியை தொடங்க பிளான் போட்டு விட்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

மோசமான சீசன்

மோசமான சீசன்

ஐபிஎல் தொடரில் இதுவரை 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கொல்கத்தா அணி கடந்த ஆண்டு ப்ளே ஆஃப்-க்கு கூட முன்னேறவில்லை. தொடரின் நடுவே தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக மோர்கனையும் கேப்டனாக நியமித்து பார்த்தார்கள். எனினும் அந்த அணி கடந்த சீசனில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதன் காரணமாக இந்தாண்டு பெரும் திட்டத்துடன் கம்பேக் கொடுக்க தயாராகியுள்ளது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

அந்த வகையில் மும்பையில் வீரர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. இதற்காக தினேஷ் கார்த்திக், வருண் சக்கரவர்த்தி, ராகுல் திரிப்பாதி, கம்லேஷ் நாகர்கோட்டி, சந்தீப் வாரியர் உள்ளிட்டோர் மும்பை சென்றுள்ளனர். மேலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரசுல் ஆகியோர் விரைவில் பயிற்சியில் இணைவார்கள் என எதிபார்க்கப்படுகிறது. ஆண்ட்ரே ரசுல் விமானத்தில் மாஸ்க் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தையும் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

விதிமுறை

விதிமுறை

பயிற்சி முகாமுக்கு வருகை தந்துள்ள ஒவ்வொரு வீரரும் 7 நாட்கள் தனி ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அணியின் பபுல்களுக்கு சென்று பயிற்சியை தொடங்கவுள்ளனர். ஆனால் இந்த அணியின் வீரர்களான இயான் மோர்கன், சுப்மன் கில், குல்தீப் யாதவ், ப்ரஷித் கிருஷ்ணா ஆகியோர் இங்கிலாந்து - இந்தியா தொடரில் பங்கேற்றிருப்பதால் அவர்கள் நேரடியாக தேசிய அணியின் பபுளில் இருந்து ஐபிஎல் அணியின் பபுளிற்கு மாறிக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

பலமான அணி

பலமான அணி

இந்தாண்டு ஐபிஎல்-ல் அசத்துவதற்கு எவ்வளவு தொகையை ஏலத்தில் செலவழித்தாலும் பரவாயில்லை என்று நினைத்த கொல்கத்தா அணி நிர்வாகம், இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் 8 வீரர்களை ரூ.10.75 கோடிக்கு வாங்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசனை ரூ.3.2 கோடிக்கு அந்த அணி வாங்கியுள்ளது. அதே போல, ஹர்பஜன் சிங், கருண் நாயர், பென் கட்டிங்ஸ் உள்ளிட்ட வீரர்களையும் களமிறக்கியுள்ளது. இதுதவிர தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரிவ் ரஸல், சுனில் நரைன், குல்தீப் யாதவ், சுப்மன் கில், லக்கி ஃபர்கியூசன், நிதிஷ் ரானா என பலமான அணியாக இருக்கிறது கொல்கத்தா.

Story first published: Tuesday, March 23, 2021, 10:25 [IST]
Other articles published on Mar 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+