Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தள்ளிப்போகிறதா ஐபிஎல் தொடர்....15 நாட்கள் ஓய்வு என்ற லோதா கமிட்டி பரிந்துரை...பிசிசிஐ-ன் நிலை என்ன?

மும்பை: லோதா கமிட்டி எடுத்துள்ள முடிவால் ஐபிஎல் தொடர் தள்ளிப்போகுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தாண்டு வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

இந்நிலையில் வீரர்களுக்கு ஓய்வு தேவை எனக்கூறி ஐபிஎல் தொடரை தள்ளிவைக்க லோதா கமிட்டியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 ஐபிஎல் போட்டி

ஐபிஎல் போட்டி

கொரோனா காரணமாக கடந்தாண்டு ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தாண்டும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதே போல ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்நிலையில் லோதா கமிட்டியின் பரிந்துரை, ஐபிஎல் போட்டி சொன்ன தேதியில் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது குறித்து ஆய்வு செய்து பிசிசிஐ-க்கு புதிய பரிந்துரைகளை செய்ய உச்சநீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது லோத கமிட்டி. இந்த கமிட்டி தற்போது, இந்திய அணியின் சர்வதேச போட்டிகளுக்கும், ஐபிஎல் தொடருக்கும் 15 நாட்கள் இடைவெளி இருப்பதை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. வீரர்கள் ஓய்வின்றி அடுத்த 50 நாட்களும் விளையாட வேண்டும் என்பதால் இப்படி பரிந்துரைத்துள்ளது.

இந்திய அணி தொடர்கள்

இந்திய அணி தொடர்கள்

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு இந்திய அணி கடந்த 4 மாதங்களாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர் என தொடர்ச்சியாக பிசியாக உள்ளது. இங்கிலாந்துடன் ஏற்கனெவே டி20 மற்றும் டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில் ஒரு நாள் தொடரும் வரும் ஏப்.28ம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. இந்த சர்வதேச தொடரை முடித்துவிட்டு. வீரர்கள் உடனடியாக அவர்களின் ஐபிஎல் அணிகளின் பபுளுக்கு திரும்ப வேண்டியுள்ளது.

வரலாறு

வரலாறு

எனினும் லோதா கமிட்டியின் பரிந்துரையை பிசிசி ஏற்றுக்கொள்ளாது என்றே தெரிகிறது.வீரர்களுக்கு ஓய்வெடுக்கும் விவகாரம் என்று பார்த்தால் கடந்த சில வருடங்களில், கடந்தாண்டு லாக்டவுன் இருந்ததால் வீரர்களுக்கு நல்ல ஓய்வு கிடைத்திருந்தது. 2019ம் ஆண்டில் வெறும் 9 நாட்களே ஓய்வு அளிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு 15 நாட்களும் ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் திட்டமிட்டபடி தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

Story first published: Friday, March 26, 2021, 17:27 [IST]
Other articles published on Mar 26, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+