Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘வாத்திகளின் சந்திப்பு’.. பீஸ்ட் படப்பிடிப்பில் தோனி திடீர் விசிட்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

பூந்தமல்லி: சென்னை வந்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, நடிகர் விஜய்யை நேரில் சென்று சந்தித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள 14வது ஐபிஎல் போட்டிகளை மீண்டும் நடத்தும் இறுதிகட்ட ஏற்பாடுகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னையில் ஒன்றிணைந்து வருகின்றனர்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் அணிகள், ஆகஸ்ட் 10ம் தேதிக்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று முன்னேற்பாடுகள், பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என ஐசிசி அனுமதி அளித்துள்ளது. அதன்படி பார்த்தால் ஐபிஎல் தொடரில் மிக வலுவான அணியாக கருதப்படும் சிஎஸ்கேவில் பல்வேறு வீரர்கள் சர்வதேச தொடர்கள் எதிலும் பங்கேற்காமல் உள்ளனர். எனவே அவர்கள்தான் முதலில் அமீரகம் செல்வார்கள் எனக்கூறப்படுகிறது.

சென்னையில் தோனி

சென்னையில் தோனி

அந்தவகையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சமீபத்தில் சென்னை வந்தடைந்தார். அவர் தனது குடும்பத்தினருடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. சென்னை அணி நாளை தனி விமானம் மூலம் அமீரகம் புறப்படுகிறது. அதுவரை தோனி சென்னையை ஜாலியாக சுற்றிப்பார்த்து வருகிறார்.

தோனி - விஜய்

தோனி - விஜய்

இந்நிலையில் இன்று திடீர் சர்ப்ரைஸாக நடிகர் விஜய்யை நேரில் சென்று பார்த்துள்ளார் தோனி. நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஃபில்ம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனியும் விளம்பர ஷூட்டிங்கிற்காக அதே ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அப்போது தனது படப்பிடிப்பை முடித்துக்கொண்ட தோனி, பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து விஜய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து படப்பிடிப்பு தளத்தில் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். விஜய் மற்றும் தோனி சந்தித்துப் பேசிக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை தற்போது ஆக்கிரமித்துள்ளது. மேலும் Dhoni meets Vijay என்ற ஹேஷ்டேக்குகளும் ட்ரெண்டாகி வருகிறது.

 வாத்தி கம்மிங் பாடல்

வாத்தி கம்மிங் பாடல்

சிஎஸ்கே அணி கேப்டன் தோனி, அவ்வபோது விஜய் குறித்து பேசுவார். ஐபிஎல் தொடரின் போது நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு தோனி நடனம் ஆடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனினும் சிஎஸ்கே அணி, தோனியின் பேட்டிங்கை வைத்து வாத்தி கம்மிங் பாடலுடன் இணைத்து வீடியோ வெளியிட்டது. அது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Story first published: Thursday, August 12, 2021, 16:48 [IST]
Other articles published on Aug 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+