Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெற்றி மட்டுமே முக்கியமல்ல.. தோனி ஏன் இன்னும் சிஎஸ்கே கேப்டன்... மனம் திறந்த சீனிவாசன் !

சென்னை: சி.எஸ்.கே அணியின் உரிமையாளர் சீனிவாசன், தான் ஏன் இன்னும் தோனி எனும் ஒருவரை நம்புகிறேன் என மனம் திறந்துள்ளார்.

Recommended Video

தோனி ஏன் இன்னும் சிஎஸ்கே கேப்டன்... மனம் திறந்த சீனிவாசன்

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சி எடுத்து வரும் நிலையில் தோனியின் பக்கம்தான் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

இந்நிலையில் சி.எஸ்.கே அணிக்கும் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கும் இடையேயான பந்தம் குறித்து அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பயிற்சி

பயிற்சி

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது முதல் போட்டியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வரும் ஏப் 10ம் தேதி எதிர்கொள்கிறது. இப்போட்டி மும்பையில் நடைபெறவிருக்கிறது. இதற்காக கேப்டன் எம்.எஸ்.தோனி, அம்பத்தி ராயுடு உள்ளிட்ட பலர் சென்னையில் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர். கடந்த முறை சென்னை அணி படுதோல்வி சந்தித்ததால் இந்த முறை மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பந்தம்

பந்தம்

இதுகுறித்து பேசிய சி.எஸ்.கே உரிமையாளர் சீனிவாசன், தோனி தினமும் காலை மற்றும் மாலை என தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளார். அவர் மிகவும் அர்ப்பணிப்போடு செயல்படுபவர். அதுதான் எங்களுக்கு பிடித்தது. ஐபிஎல்-யை பொறுத்தவரை வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். ஆனால் அதில் நீடித்த தன்மை மற்றும் விசுவாசம் என்பது மிக முக்கியம். அதுவே எங்கள் அணியில் உள்ளது என தெரிவித்தார்.

தோனி

தோனி

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் தோனி சி.எஸ்.கே அணியின் கேப்டனாக உள்ளார். இவர் தலைமையில் இதுவரை 3 முறை அந்த அணி கோப்பை வென்றுள்ளது. 2 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்றுள்ளது. ஐபிஎல்-ல் ஒரு அணிக்கு நீண்ட காலம் கேப்டனாக இருந்த பெருமையை தோனியையே சார்ந்துள்ளது.

வெற்றிகள்

வெற்றிகள்

சி.எஸ்.கே இதுவரை மொத்தமாக ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரை சேர்த்து 188 போட்டிகளில் தோனி தலைமையில் ஆடியுள்ளது. அதில் 119 வெற்றிகளும், 76 தோல்விகளும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

ஐபிஎல்-ல் 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பெருமையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளது.

Story first published: Saturday, March 13, 2021, 16:59 [IST]
Other articles published on Mar 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+