Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியையே மிஞ்சும் ரிஷப் பண்ட்.... முன்னாள் வீரர் நம்பிக்கை...ஏன் தெரியுமா?

மும்பை: எம்.எஸ்.தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்த ப்ளேயராக வரலாம் என முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் மற்றும் தோனியை ஒப்பிட்டு இணையத்தில் கருத்துகள் பகிர்வது புதிதல்ல.

ஆனால் தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்த வீரராக வர வாய்ப்புள்ளது என முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஒப்பீடு

ரசிகர்கள் ஒப்பீடு

இளம் வீரர் ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக அவரின் கீப்பிங் ஸ்டைல் மற்றும் அதிரடியாக பேடிங் செய்து அணியை வெற்றி செய்ய வைப்பது போன்றவை எம்.எஸ்.தோனியை போன்றே உள்ளதாக கருத்துகள் பரவின. இன்னும் சிலர் ரிஷப் பண்ட், தோனியை போலவே ஆட முயற்சிக்கிறார் எனவும் கூறப்பட்டன.

ஐபிஎல்

ஐபிஎல்

இந்த பேச்சுகளை அதிகரிக்கும் விதமாக தற்போது ரிஷப் பண்ட்-க்கு ஐபிஎல்-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து தொடரின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதால் ரிஷப் பண்ட்-க்கு இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அணியில் ஸ்டீவ் ஸ்மித், அஸ்வின் போன்ற அனுபவ வீரர்கள் இருக்கும்போதும் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர் கண்டிப்பாக அடுத்த தோனியாக உருவெடுப்பார் என பேச்சுக்கள் எழத் தொடங்கியுள்ளன.

பாத்தீவ் கருத்து

பாத்தீவ் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பார்த்தீவ் பட்டேல், எம்.எஸ்.தோனியுடன் ரிஷப் பண்ட்-ஐ ஒப்பிட்டு எழும் கருத்துகளால் பண்ட் அதிக சுமைகளை எதிர்கொள்கிறார். அவரும் தோனியை போல ஆக முயற்சிக்க வேண்டாம். ரிஷப் பண்டால் தோனியை விட சிறந்த வீரராக ஒற்றை ஆளாக அணிக்கு வெற்றி தேடி தர முடியும் என தெரிவித்துள்ளார்.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

மேலும் அவர், டெல்லி அணிக்கு முக்கிய வீரராக இந்தாண்டு ரிஷப் பண்ட் திகழ்வார். ஏனென்றால் சர்வதேச போட்டிகளில் ரிஷப் பண்ட் மிகச்சிறப்பாக ஆடினார். அதே நம்பிக்கையுடன் ஐபிஎல்- திகழ்ந்தால் ரிஷப் பண்ட் இந்தாண்டு சிறந்த வீரராக செயல்படுவதில் சந்தேகமே இல்லை.

Story first published: Thursday, April 1, 2021, 19:07 [IST]
Other articles published on Apr 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+