Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவின் ரிட்டன்ஸ்...சி.எஸ்.கேவின் பலம் மற்றும் பின்னடைவு... கணித்துள்ளார் பார்த்தீவ் பட்டேல்

சென்னை: சி.எஸ்.கே அணிக்கான பயிற்சியில் சுரேஷ் ரெய்னா தொடங்கியுள்ள நிலையில் அவரால் அந்த அணியில் ஏற்படும் பிரச்னை மற்றும் பலம் குறித்து கணிக்கப்பட்டுள்ளது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு பெரிய அளவில் அடிவாங்கிய சென்னை தான் முதல் ஆளாக பயிற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் களத்தில் இறங்கியுள்ளதால் அணியில் ஏற்படும் மாற்றம் குறித்து பார்த்தீவ் பட்டேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏப்ரல் 9

ஏப்ரல் 9

இந்தாண்டுக்கான ஐபிஎல்-ல் சென்னை அணி வரும் ஏப்.10ம் தேதி டெல்லியுடன் முதல் போட்டியை ஆடவுள்ளது. கடந்த முறை தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாது. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி கடந்த சீசனில் ப்ளே ஆஃப்-க்கு செல்லாமல் வெளியேறியது. இதற்கு சென்னை அணியில் சின்ன தல ரெய்னா இல்லாததே காரணமாக பார்க்கப்பட்டது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

கடந்த ஆண்டை போல ஆகிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஐபில் தொடரில் முதல் ஆளாக சி.எஸ்.கே பயிற்சியை தொடங்கியது. இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட் என கலந்துக்கொண்டுள்ளனர். கடந்த சீசனில் அனைவராலும் பெரிதும் மிஸ் செய்யப்பட்ட ரெய்னா இந்த ஆண்டு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என பயிற்சியில் அதிரடி காட்டி வருகிறார்.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இதுகுறித்து பேசியுள்ள பார்த்தீவ் பட்டேல், சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் பேட்டிங் லைன் அப்பில் கீ ப்ளேயராக நிச்சயம் இருப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், கடந்த ஆண்டு சென்னைக்கு ஸ்கோர் அடிப்பதே பிரச்னையாக இருந்தது. ஆனால் இந்த முறை முதல் வரிசையில் ரெய்னா உள்ளதால் சிறப்பாக இருக்கும் அதே போல் ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் மிடிலில் தோனி தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என தெரிவித்தார். இதுவரை 193 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள ரெய்னா 5, 368 ரன்கள் அடித்து ஐபிஎல் -ல் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.

பலவீனம்

பலவீனம்

இந்த முறை ஹோம் அட்வாண்டேஜ் இல்லாததால் சென்னையில் சி.எஸ்.கே அணி ஆட முடியாது. ஆனால் ஸ்பின்னர்களுக்கான பிட்ச்சை மனதில் வைத்து அவர்கள் மொயீன் அலி, கிருஷ்ணப்பா அணியை ஏலத்தில் புதிதாக எடுத்திருப்பது சற்று பின்னடைவு தான். எனினும் சென்னை அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. எனவே ஒரு முறை அடி வாங்கினால், மீண்டும் எப்படி சிறந்த முறையில் கம்பேக் கொடுப்பது அந்த அணிக்கு சுலபம். தோனி அணியை மீட்டு வர போராடுவார் என பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, March 19, 2021, 17:24 [IST]
Other articles published on Mar 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+