
வீரர்கள் வருகை
ஐபிஎல் தொடர் நெருங்கி வருவதால் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை அணிக்குள் திரட்டி வருகிறது. அயல்நாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருகை தந்து பயிற்சிக்கு ஆயத்தமாகி வருகின்றனர். அந்தவகையில் ஆர்.சி.பி அணியின் முக்கிய பலமாக கருதப்படும் அயல்நாட்டு வீரர்கள் இன்னும் இந்தியா வரவில்லை. இந்நிலையில் இந்த அணியின் வீரர் ஆடம் சாம்பாவுக்கு திருமணம் நடைபெறவிருப்பதால் அவர் தொடரில் பங்கேற்பதில் தாமதம் ஏற்படலாம்.

விளக்கம்
இதுகுறித்து தெரிவித்துள்ள ஆர்.சி.பி அணியின் நிர்வாகி மைக் ஹெசன், ஆடம் சாம்பாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அதை நாங்கள் மதிக்கிறோம். அவருக்கு இது முக்கியமான தருணம். எனவே அவர் திருமணத்திற்கு பிறகு ஐபிஎல்-ல் பங்குபெறுவார். அப்போது அணிக்காக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என தெரிவித்தார். ஆடம் சாம்பாவுக்கு கடந்த ஆண்டே திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

பயிற்சி
பெங்களூரு அணி மார்ச் 29ம் தேதி முதல் பயிற்சி முகாமை தொடங்கவுள்ளது. இதற்காக ஏ.பி.டிவில்லியர்ஸ் மார்ச் 28ம் தேதி வருகை தருவார் என்றும் மேக்ஸ்வெல், கெயில் ஜேமிசன் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் ஏப்ரல் 1ம் தேதிக்குள் வருகை தருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துடனான தொடர் மார்ச் 28ம் தேதி முடிவடைகிறது. எனவே விராட் கோலியும் 28ம் தேதியன்று ஆர்.சி.பி அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான பயிற்சி
பயிற்சி குறித்து பேசிய ஹெசன், கடந்த சீசனில் தொடர் தொடங்குவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னரே அனைத்து வீரர்களும் பயிற்சியில் இருந்தனர். ஏனென்றால் கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் அதிக பயிற்சி தேவைப்பட்டது. ஆனால் இந்த முறை பல வீரர்கள் சர்வதேச போட்டியில் பங்குபெற்றுள்ளனர். எனவே இந்த முறை பயிற்சியில் சற்று வித்தியாசம் இருக்கும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











