Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கே-வில் உத்தப்பாவை எடுக்க தோனி விருப்பம் தெரிவிக்கவில்லை, உண்மையை உடைத்த உத்தப்பா,. என்ன காரணம்

சென்னை: வரும் ஐபிஎல்-ல் சென்னை அணிக்கு ராபின் உத்தப்பாவை எடுக்க தோனி விருப்பம் தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

2021 ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. சென்னை அணி வழக்கம் போல மூத்த வீரர்களையே அதிகளவில் ஏலம் எடுத்துள்ளது.

அந்தவகையில் சி.எஸ்.கேவால் மூத்த வீரர் ராபின் உத்தப்பா வாங்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை அணியில் அவரை ஏலம் எடுத்ததில் தோனி விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் அதற்கு வேறு காரணம் உள்ளது என்றும் உத்தப்பாவே கூறியுள்ளார்.

சி.எஸ்.கே ஏலம்

சி.எஸ்.கே ஏலம்

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக இவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. குறிப்பாக கடந்த 2 சீசன்களிலும் அவர் 300 ரன்களை கூட தாண்டவில்லை. இதனால் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட ரூ.3 கோடிக்கே சி.எஸ்.கே அவரை வாங்கியது.

தோனி முடிவு

தோனி முடிவு

இந்நிலையில் தான் சென்னை அணியில் சேர்ந்தது குறித்து பேசியுள்ள உத்தப்பா, ஏலத்திற்கு பின் தோனி என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது என்னை வாங்க தோனி விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும், அணி நிர்வாகம் முழுவதும் சேர்ந்து எடுத்தது என தெரிவித்தார். மேலும் நான் தோனி இருப்பதால் அணிக்குள் சுலபமாக வந்துவிட்டேன் என யாரும் பேசிவிடக்கூடாது, எனது திறமையால் அணிக்குள் நுழைய வேண்டும் என தோனி நினைத்ததாகவும், உத்தப்பா கூறியுள்ளார்.

புகழாரம்

புகழாரம்

தொடர்ந்து பேசிய உத்தப்பா, தன்னால் யாரும் அணிக்குள் நுழையவில்லை, ஒவ்வொருவரும் அவர்களின் திறமையால் வாங்கப்பட்டனர் என்ற நம்பிக்கை கொடுக்கும் தோனி போன்ற கேப்டனுக்கு கீழ் விளையாடுவது சிறப்பானது. இப்படிபட்ட நேர்மையானவரை பார்க்கையில் ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்தார்.

 ஐபிஎல்-ல் உத்தப்பா

ஐபிஎல்-ல் உத்தப்பா

ஐபிஎல் போட்டியில் கடந்த 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராபின் உத்தப்பா 4607 ரன்களை குவித்துள்ளார். சென்ன சூப்பர் கிங்ஸ், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் 6வது அணியாகும். இவர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மொத்தம் 377 ரன்கள் அடித்து அத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அதே போல் தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டி ஒன்றிலும் ஓப்பனராக களமிறங்கி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Story first published: Thursday, March 25, 2021, 11:23 [IST]
Other articles published on Mar 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+