Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு அந்த பொஷிஷன் வேண்டும்.அங்க நான் நல்ல விளையாடுவேன்.உத்தப்பாவின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா தோனி

சென்னை: வரும் ஐபிஎல்-ல் சி.எஸ்.கே அணிக்கு ஆடும் உத்தப்பா, தனது கோரிக்கை நிறைவேற்றினால் அணியின் வெற்றிக்கு உதவியாக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

2021 ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. சென்னை அணி வழக்கம் போல மூத்த வீரர்களையே அதிகளவில் ஏலம் எடுத்துள்ளது.

அந்தவகையில் சி.எஸ்.கேவால் மூத்த வீரர் ராபின் உத்தப்பா வாங்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னை அணியின் வெற்றிக்காக தன்னை ஓப்பனிங் இரக்கிவிட வேண்டும் என உத்தப்பா ஆசை தெரிவித்துள்ளார்.
சென்னை

சி.எஸ்.கே ஏலம்

சி.எஸ்.கே ஏலம்

கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் ஆடி வந்த மூத்த வீரர் ராபின் உத்தப்பாவை சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் வாங்கியுள்ளது. கடந்த இரண்டு வருடமாக இவர் ஐபிஎல் போட்டிகளில் சரியாக ஆடவில்லை. இதனால் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட ரூ.3 கோடிக்கே சி.எஸ்.கே அவரை வாங்கியது.

கோரிக்கை

கோரிக்கை

ஐபிஎல் குறித்து பேசிய அவர், சென்னை அணிக்காக நான் ஓப்பனிங் ஆட வேண்டும் என விரும்புகிறேன். நான் ஒவ்வொரு முறையும் ஓப்பனிங் இரங்கும் போது நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளேன். ஆனால் சமீப நாட்களில் சில அணிகள் எனக்கு பொருந்தாத இடங்களில் களமிறக்க வைக்கின்றனர். இதனால் தான் எனது ஆட்டம் சற்று மோசமாகிறது. நான் ஓப்பனிங் இரங்கினால் கண்டிப்பாக அணிக்கு வெற்றியை தேடி தருவேன் எனக்கூறியுள்ளார்.

மூத்த வீரர்

மூத்த வீரர்

ஐபிஎல் போட்டியில் கடந்த 2008 முதல் 189 ஆட்டங்களில் விளையாடியுள்ள ராபின் உத்தப்பா 4607 ரன்களை குவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், அவர் ஐபிஎல் தொடரில் விளையாடும் 6வது அணியாகும். இவர் விஜய் ஹசாரே கோப்பை தொடரில் மொத்தம் 377 ரன்கள் அடித்து அத்தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்தார். அதே போல் தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் உள்ளூர் போட்டி ஒன்றிலும் ஓப்பனராக களமிறங்கி நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

நட்பு

நட்பு

தோனி குறித்து பேசிய அவர், எம்.எஸ்.தோனியுடன் எனக்கு சிறந்த அனுபவங்கள் உண்டு. 2004ம் ஆண்டு சேலஞ் ட்ராபி கேம்பெயினில் முதன்முதலில் சந்தித்துக்கொண்டோம். இந்திய அணிக்காக நாங்கள் இணைந்து ஆடியது முதல் தற்போதுவரை சிறந்த நண்பர்களாக உள்ளோம். அவரின் குடும்பத்தாரும் எனது குடும்பத்தாரும் மிக நெருக்கமானவர்கள் தான் என தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, March 11, 2021, 16:08 [IST]
Other articles published on Mar 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+