For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது ஐடியாவா? கிண்டலா? டேவிட்வார்னருக்கு ஏற்பட்ட குழப்பம்.. கமெண்ட்டில் குசும்பு செய்த ரோகித் சர்மா!

சென்னை: இந்தியா வந்த டேவிட் வார்னரை, ஒரு இன்ஸ்டா போஸ்ட் போட்டது குத்தமா என ஃபீல் செய்ய வைக்கும் அளவிற்கு கலாய்த்து உள்ளார் ரோகித் சர்மா.

ஐபிஎல் தொடருக்காக அயல்நாட்டு வீரர்கள் இந்தியா வரத்தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் நேற்று சென்னை வந்தடைந்தார்.

IPL 2021: Rohit Sharma trolls David Warner as he asks for ideas to get through quarantine

இந்நிலையில் வார்னரின் 7 நாட்கள் குவாரண்டைன் குறித்து ரோகித் சர்மா கிண்டல் செய்து போட்டுள்ள இன்ஸ்டா கமெண்ட் வைரலாகி வருகிறது.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதற்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னையில் ஏப்ரல் 11ம் தேதி ஐதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதற்காக அவர் 7 நாட்கள் கட்டாய குவாரண்டைனில் இருந்து வருகிறார்.

இதுகுறித்து அவர் நேற்று ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், நான் சென்னை வந்துவிட்டேன். ஆனால் குவாரண்டைனின் அடுத்த நாட்களை கடத்த எனக்கு ஏதாவது ஐடியாவை கமெண்ட்டில் பதிவிடுங்கள். அது ஒரு பிரச்னையாக உள்ளது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு கமெண்ட் செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா, வார்னர் கண்டிப்பாக டிக்டாக்கை மிஸ் செய்வார் என கிண்டல் அடித்துள்ளார். டேவிட் கொரோனா லாக்டவுனின் போது பல டிக்டாக் வீடியோக்களை செய்து இந்திய ரசிகர்களின் ஸ்டார் ஆனார். குறிப்பாக தமிழ், தெலுங்கு பாடல்களுக்கு அவர் குடும்பத்தினருடன் செய்த டிக்டாக் வைரலானது. எனவே தற்போதும் ரோகித் கூறியதை போல அவரிடம் இருந்து டிக்டாக் வீடியோக்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, April 3, 2021, 21:36 [IST]
Other articles published on Apr 3, 2021
English summary
Rohit Sharma trolls David Warner as he asks for ideas to get through quarantine
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+