Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட அவருக்கு வேகம் குறையல,..களமிறங்கிய ரெய்னா...மிரளவைக்கும் ஷாட்ஸ், சம்பவம் இருக்கு- வீடியோ

சென்னை: சி.எஸ்.கே அணி நிர்வாகம் போட்டுள்ள ஒற்றை ட்வீட்டால் ரசிகர்கள் சந்தோஷத்தில் என்ன செய்வது என தெரியாமல் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

14வது ஐபிஎல் தொடர் வரும் ஏப்.9ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு பெரிய அளவில் அடிவாங்கிய சென்னை தான் முதல் ஆளாக பயிற்சியில் இரங்கியுள்ளது.

இந்நிலையில் சின்ன தல சுரேஷ் ரெய்னாவும் களத்தில் இறங்குவது குறித்து சென்னை அணி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

 ஏப்ரல் 9

ஏப்ரல் 9

இந்தாண்டுக்கான ஐபிஎல்-ல் சென்னை அணி வரும் ஏப்.10ம் தேதி டெல்லியுடன் முதல் போட்டியை ஆடவுள்ளது. கடந்த முறை தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாது. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி கடந்த சீசனில் ப்ளே ஆஃப்-க்கு செல்லாமல் வெளியேறியது. இதற்கு சென்னை அணியில் சின்ன தல ரெய்னா இல்லாததே காரணமாக பார்க்கப்பட்டது.

பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

கடந்த ஆண்டை போல ஆகிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஐபில் தொடரில் முதல் ஆளாக சி.எஸ்.கே பயிற்சியை தொடங்கியது. இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட் என கலந்துக்கொண்டுள்ளனர். எனினும் கடந்த ஆண்டு அனைவராலும் பெரிதும் மிஸ் செய்யப்பட்ட ரெய்னா இந்த ஆண்டு பயிற்சியில் ஏன் இன்னும் கலந்துக்கொள்ளவில்லை என கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.

திரும்பிய ரெய்னா

திரும்பிய ரெய்னா

இந்நிலையில் ரெய்னா குறித்த கேள்விகளுக்கு பதிலடி தரும் வகையில் சென்னை அணி சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுரேஷ் ரெய்னா சென்னையில் பயிற்சியை தொடங்கிவிட்டார் என கூறப்பட்டுள்ளது. மேலும் வீடியோவில் ரெய்னா சிக்ஸர்களை சிதறவிடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால், இந்தாண்டு ஒரு சம்பவம் இருக்கு என சென்னை ரசிகர்கள் உற்சாகத்தில் தலை கால் புரியாமல் மிதந்து வருகின்றனர்.

 பழைய சர்ச்சை

பழைய சர்ச்சை

கடந்த சீசனின் சி.எஸ்.கே அணிக்காக ஆடவிருந்த ரெய்னா, இறுதியில் தொடரில் பங்கேற்கவில்லை. முதலில் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை எனக்கூறப்பட்டது. பின்னர் ரெய்னாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது. எனவே கடந்த சீசனில் விட்ட மொத்த வெறியையும் இந்த சீசனில் தோனி, ரெய்னா என இருவருமே தீர்த்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, March 18, 2021, 11:37 [IST]
Other articles published on Mar 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+