Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னா மனுஷன்யா. கொரோனா நிதியுதவிக்காக கோலி - அனுஷ்கா பெரும் முன்னெடுப்பு.. வாயடைத்து போன ரசிகர்கள்

மும்பை: கொரோனா நிவாரணம் வழங்க விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் இணைந்து செய்துள்ள திட்டம் பாராட்டை பெற்று வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர்.

இதனால் கொரோனாவை எதிர்த்து போராட கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலர் நிதியுதவியளித்து வருகின்றனர்.

புதிய திட்டம்

புதிய திட்டம்

இந்நிலையில் கிரிக்கெர் வீரர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மா இணைந்து கொரோனா நிதியுதவி உதவி திரட்ட மிகப்பெரும் முன்னெடுப்பை எடுத்துள்ளனர். இதற்காக 'கெட்டோ' என்ற திட்ட பெயரில் சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ள அவர்கள், முதல் ஆளாக அதில் ரூ.2 கோடி நிதியுதவி செய்துள்ளனர்.

7 நாட்கள் தான்

7 நாட்கள் தான்

அந்த சமூகவலைதளத்தை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வலைதளம் இன்று முதல் 7 நாட்களுக்கு செயல்பாட்டில் இருக்கும். அதற்குள்ளாக ரூ.7 கோடி திரட்டுவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைய வேண்டும்

ஒன்றிணைய வேண்டும்

இதுகுறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள வீடியோவில், நம் நாட்டின் மிகவும் கஷ்டமான காலங்களை நோக்கி நாம் நகர்ந்து வருகிறோம். கடந்த வருடம் முதல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியிருப்பதை கண்டு வேதனையடைந்துள்ளோம். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து முடிந்தவரை மக்களை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விராட் கோலி கோரிக்கை

விராட் கோலி கோரிக்கை

மேலும் அவர், நம் நாட்டிற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் நமது ஆதரவு தேவை. எனவே நானும் - அனுஷ்காவும் இணைந்து நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து கொரோனா பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற முயற்சிப்பீர்கள் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். அவர்கள் தொடங்கியுள்ள நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இதுவரை ரூ. 2, 37, 13,595 சேர்ந்துள்ளது. 2732 பேர் நிதியுதவி செய்துள்ளனர்.

Story first published: Friday, May 7, 2021, 14:08 [IST]
Other articles published on May 7, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+