Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு சின்னப்பய சாச்சிடானே.... தோனியே ஒரு நிமிஷம் மிரண்டுட்டார்... சிஎஸ்கேவின் இளம் ரத்தம்.... வீடியோ

சென்னை: சி.எஸ்.கே அணியின் பயிற்சியின் போது கேப்டன் தோனியையே அசரடித்துள்ளாராம் இளம் வீரர் ஒருவர்.

ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்காக சென்னை அணி ஆயத்த பணிகளில் இறங்கியுள்ளது. இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என வீரர்கள் பயிற்சியில் வெறித்தனம் காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் பயிற்சி ஆட்டத்தின் போது இளம் வீரர் ஹரிசங்கர் ரெட்டி, தனது ஆட்டத்தால் கேப்டன் தோனியை ஒரு நிமிடம் பிரமிப்பில் ஆழ்த்தினார்.

சி.எஸ்.கே

கடந்த சீசனில் பெரியளவில் அடிவாங்கிய சென்னை அணி இந்த முறை அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக பயிற்சியை தொடங்கியது. இதில் கேப்டன் தோனி, அம்பத்தி ராயுடு, ருத்ராஜ் கெயிக்வாட் மற்றும் இளம் வீரர்கள் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். தோனி மற்றும் மற்ற வீரர்களின் பயிற்சி குறித்து அவ்வபோது வெளிவரும் அப்டேட்கள் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது.

அசரடித்த சின்ன பையன்

அசரடித்த சின்ன பையன்

ஐபிஎல் நெருங்கி வருவதால் நேற்று சென்னை அணி வீரர்களுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இப்போட்டியில் தோனிக்கு எதிராக இளம் வீரர் ஹரி சங்கர் ரெட்டி வீசிய பந்து கண் இமைப்பதற்குள் லெக் சைட் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. மிகுந்த நம்பிக்கையுடன் ஷாட் ஆட சென்ற தோனி ஒரு நொடி அங்கு என்ன நடந்தது என்று தெரியாத அளவுக்கு பிரமிப்படைந்துள்ளார். இப்போட்டியில் தோனி 60 ரன்களை எடுத்து நல்ல ஃபார்மில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே தோனியை இளம் வீரர் ஒருவர் வெகு நேர்த்தியாக போல்ட் செய்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஹரி சங்கர்

ஹரி சங்கர்

22 வயதாகும் ஹரி சங்கர் ரெட்டி ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஆந்திர மாநில அணிக்காக விளையாடி வந்தார். விவசாயியின் மகனான இவர் கிரிக்கெட்டுடன் சேர்த்து கடப்பாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியதால் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்காக அவரை ரூ. 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது சென்னை அணி. இவரோட சேர்த்து மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம் என பந்துவீச்சுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளதால் சென்னையின் பந்துவீச்சு அசுர பலமடைந்துள்ளது.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்தாண்டுக்கான ஐபிஎல்-ல் சென்னை அணி வரும் ஏப்.10ம் தேதி டெல்லியுடன் முதல் போட்டியை ஆடவுள்ளது. கடந்த முறை தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாது. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி கடந்த சீசனில் ப்ளே ஆஃப்-க்கு செல்லாமல் வெளியேறியது. ஆனால் இந்த முறை பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளதால் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு எகிறியுள்ளது.

Story first published: Thursday, March 18, 2021, 13:31 [IST]
Other articles published on Mar 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+