
பிளே ஆப் சுற்று
இந்த நிலையில், ஐபிஎல் 15வது சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற 10 அணிகளும் எஞ்சிய போட்டியில் எத்தனை வெற்றி பெற வேண்டும் என்பதை தற்போது காணலாம். முதலிடத்தில் உள்ள குஜராத், எஞ்சிய 8 போட்டியில் மூன்றில் வென்றால் கூட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம். இதே போன்று 2வது இடத்தில் உள்ள பெங்களூரு அணியும் எஞ்சிய 7 போட்டியில் மூன்றில் வெல்ல வேண்டும்.

தேவைப்படும் வெற்றி
ராஜஸ்தான் அணி எஞ்சிய 8 போட்டியில் குறைந்தது 4 போட்டியிலாவது வெல்ல வேண்டும். 4வது இடத்தில் உள்ள லக்னோ எஞ்சிய 7 போட்டியில் 4 போட்டியிலாவது வெல்ல வேண்டும். ஐதராபாத் அணி எஞ்சிய 8 போட்டியில் 4 போட்டியிலாவது குறைந்தபட்சம் வென்று இருக்க வேண்டும். கொல்கத்தா அணி எஞ்சிய 7 போட்டியில் குறைந்தபட்சம் ஐந்தில் வெல்ல வேண்டும்.

சிஎஸ்கேக்கு 7
இதே போன்று பஞ்சாப் அணி எஞ்சிய 8 போட்டியில் குறைந்தபட்சம் 5 போட்டியில் வெற்றி பெற வேண்டும். டெல்லி அணி விளையாட வேண்டிய 9 போட்டியில் 6 ஆட்டங்களில் வென்று இருக்க வேண்டும். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டியில் 7 ஆட்டங்களில் வென்று இருக்க வேண்டும்.
Recommended Video

மும்பைக்கு 8
5 முறை சாம்பியனான மும்பை அணி எஞ்சியுள்ள 8 போட்டியில் எட்டிலும் வென்று இருக்க வேண்டும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி 9 அல்லது 10 போட்டிக்கு மேல் வென்று இருந்தால், மூன்றாவது மற்றும் 4வது இடத்தை பிடிக்கும் அணி குறைந்தபட்சம் 7 போட்டியில் வென்று இருந்தாலுடம பிளே ஆப் வாய்ப்பு கிட்டும். இதனால் நடப்பு சீசன் இந்த கதையை நோக்கியே நகர்கிறது.


Click it and Unblock the Notifications











