Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த 17 பந்துகள்.. தலைகீழான மும்பையின் தலையெழுத்து.. டெல்லி வரலாற்று வெற்றி கண்டது எப்படி???

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Recommended Video

PBKS vs RCB: Punjab Kings Beat RCB By Five Wickets In A High Scoring Encounter | Oneindia Tamil

இரு அணிகளும் மோதிய போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷான் 81 ரன்களும், ரோகித் 41 ரன்களும் விளாசினர்.

டாப் ஆர்டர் மோசம்

டாப் ஆர்டர் மோசம்

178 என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் டாப் ஆர்டர் மொத்தமாக ஏமாற்றியது. அதிரடியாக ஆட முயன்ற பிரித்வி ஷா ( 38 ), டிம் செய்ஃபெர்ட் (21), மந்தீப் சிங் (0), ரோவ்மேன் போவல் (0) என அடுத்தடுத்து ஏமாற்றினர். பொறுப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 1 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

டெல்லியின் பரிதாபம்

டெல்லியின் பரிதாபம்

இதனால் டெல்லி அணி 104 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. அந்த அணி வெற்றி பெற வேண்டும் என்றால் 40 பந்துகளில் 73 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் விக்கெட்கள் கையில் இல்லை. இந்த சூழலில் ஜோடி சேர்ந்த லலித் யாதவ் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஜோடி அட்டகாசமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

17 பந்துகளின் கதை

17 பந்துகளின் கதை

அக்‌ஷர் பட்டேல் 2 சிக்ஸர் அடித்துவிட்டு வெளியேறுவார் என நினைத்த மும்பைக்கு பெரும் ஆப்பு வைத்தார். ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் பவுண்டரி என விரட்டினார். வெறும் 17 பந்துகளை மட்டும் சந்தித்த அவர் பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 38 ரன்கள் சேர்த்து அசத்தினார். இந்த 17 பந்துகள் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதனால் நம்பிக்கை பெற்ற லலித் யாதவ் 38 பந்துகளில் 48 ரன்களை தனது பங்கிற்கு விளாசினார்.

அட்டகாச பார்ட்னர்ஷிப்

அட்டகாச பார்ட்னர்ஷிப்

டெல்லி அணி இனி தேறாது, வெற்றி பெற்றுவிடலாம் என்ற ஆசையில் இருந்த மும்பை வீரர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. அக்‌ஷர் ஆடிய ருத்ர தாண்டவத்தில் 18.3 ஓவர்களிலேயே 178 ரன்களை எட்டி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. 7வது விக்கெட்டிற்கு அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் 75 ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 27, 2022, 21:05 [IST]
Other articles published on Mar 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+