
சிஎஸ்கே பரிதாபம்
ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை அணி முதல் 2 போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல்முறை. இதற்கு காரணம் முக்கிய வீரர்கள் இல்லாதது தான். முதல் போட்டியில் மொயீன் அலி இல்லை. இரண்டாவது போட்டியில் தீபக் சஹார் இல்லாதது பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. இவற்றையெல்லாம் தாண்டி கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார்.

மேலும் 2 வீரர்கள் இல்லை
இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. சென்னை அணியில் தற்போது முன்னணி பவுலர்களாக உள்ள இங்கிலாந்து பவுலர் கிறிஸ் ஜோர்டன் மற்றும் ஆடம் மில்னே ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன பிரச்சினை
ஜோர்டனுக்கு தொண்டைப்பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக ( Tonsil Infection ) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய சூழல் உருவானது. இதனால் தான் சென்னை அணியின் 2வது போட்டியில் ஜோர்டன் ஆடவில்லை. அவர் அடுத்த 6 நாட்களுக்கு ஓய்வுப்பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மில்னேவுக்கு என்ன ஆனது
இதே போல மற்றொரு முன்னணி பவுலரான ஆடம் மில்னேவும் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சைப்பெற்று வரும் மில்னேவும் சிஎஸ்கேவின் 2வது போட்டியில் ஆடவில்லை. இதன் விளைவுகள் தான் 210 ரன்கள் அடித்தும் சிஎஸ்கே தோற்றது. இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் சிஎஸ்கே அணி தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications