
எதிர்பார்க்காத தோல்வி
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே அடித்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே சொதப்ப, தோனி மட்டும் 38 பந்துகளில் அரைசதம் விளாசி காப்பாற்றினார். இதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

2 முக்கிய நபர்கள்
சென்னை அணி முதல் போட்டியில் தோல்வியடைய 2 வீரர்கள் மட்டுமே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதில் முதல் வீரர் அஜிங்கியா ரகானே தான். ஃபார்ம் அவுட் என முத்திரை குத்தப்பட்ட ரகானே, இனி டெஸ்ட் போட்டிக்கு கூட சரிப்பட்டு வரமாட்டார் என வெளியேற்றப்பட்டார். மெகா ஏலத்திலும் யாருமே ஆர்வம் காட்டவில்லை. இறுதியில் கொல்கத்தா அணி ரூ.1 கோடி என்ற அடிப்படை தொகையில் வாங்கியது. ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்தார். 34 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 44 ரன்களை குவித்தார். இதுதான் கொல்கத்தா அணி வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

உமேஷ் யாதவ்
இதில் 2வது வீரர் உமேஷ் யாதவ் தான். இவரும் ரகானேவை போன்று ஃபார்ம் அவுட் என புறக்கணிக்கப்பட்டவர் தான். ஏலத்தில் இவரை எடுத்ததே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியில் பவர் ப்ளே ஓவரிலேயே சிஎஸ்கேவின் 2 ஓப்பனர்களை அடுத்தடுத்து வீழ்த்தினார். அந்த அணியின் அஸ்திவாரத்தையே உடைத்து, கொல்கத்தா வெற்றிக்கு விதைப் போட்டுக் கொடுத்தார். நேற்று மொத்தமாக 4 ஓவர்களை வீசிய உமேஷ் யாதவ், 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
Recommended Video

பெரும் சர்ஃபரைஸ்
மிகவும் பலமான படையுடன் இருந்த சிஎஸ்கேவை, ஃபார்ம் அவுட்டான வீரர்கள் தான் தகர்த்துள்ளனர். இதே போல சென்னை அணியில் அனைத்து வீரர்களும் சொதப்பிய போதும், ஃபார்ம் அவுட் என கூறப்பட்ட எம்.எஸ்.தோனி தான் அரைசதம் அடித்து காப்பாற்றினார். இதனால் இந்த சீசன் ஃபார்ம் அவுட் ஆன வீரர்களின் சீசனாக இருக்கலாமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications