205-ல் இப்படி ஒரு ரகசியமா.. ஆர்சிபியை 10 ஆண்டுகளாக துரத்தும் சனி..ஐபிஎல் வரலாற்றில் சுவாரஸ்ய சம்பவம்
மும்பை: ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஒரு ஸ்கோர் மட்டும் ஆர்சிபி அணிக்கு எப்போதுமே சரிவராத ஒன்றாக மாறியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி இமாலய இலக்கை நிர்ணயித்த போதும் படு மோசமாக தோல்வியடைந்தது.

ஆர்சிபி மோசமான தோல்வி
கேப்டன் டூப்ளசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள், விராட் கோலி 41 ரன்கள், தினேஷ் கார்த்திக் 32 ரன்கள் என விளாச 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. மிக கடினமான இலக்கை பஞ்சாப் அணி விரட்டிய போது, 156 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என தோற்றுவிடும் என்பது போன்று தான் இருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஒடியன் ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்களை விளாசி 19 ஓவர்களில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

சுவாரஸ்ய சம்பவம்
இவ்வளவு ஸ்கோர் அடித்தும் ஆர்சிபி தோற்றுவிட்டதே என்ற வருத்தம் ரசிகர்களுக்கு உள்ளது. ஆனால் அவர்கள் அடித்த 205 என்ற ஸ்கோர் தான் பெரும் வினையாக வந்து சேர்ந்துள்ளது என்ற சுவாரஸ்யம் தெரியவந்துள்ளது. அதாவது ஆர்சிபிக்கு எதிராக இதுவரை 4 அணிகள் அதிகபட்ச ஸ்கோரை விரட்டியுள்ளது. ஆனால் அந்த 4 அணிகளுமே விரட்டியது இந்த 206 ரன்கள் என்ற இலக்கை தான்.

அணிகளின் விவரம்
கடந்த 2012ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்களை விரட்டி வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2018ம் ஆண்டு மீண்டும் சென்னை அணியே அதே சாதனையை படைத்தது. 2019ம் ஆண்டு கொல்கத்தா அணியும் 206 என்ற ரன்னை விரட்டியது. புது கேப்டன் வந்துவிட்டார், தலையெழுத்து மாறிவிடும் என்று நினைத்த நிலையில் 4வது முறையாக நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் 206 என்ற இலக்கை விரட்டி அதிர்ச்சி தந்துள்ளது.

புலம்பித் தள்ளும் ரசிகர்கள்
எவ்வளவு விஷயங்கள் மாறினாலும், கேப்டன்கள் மாறினாலும் ஆர்சிபி அணியின் துரதிஷ்டவசம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக 2வது இன்னிங்ஸின் போது எப்போதுமே ஆர்சிபி ரன்களை வாரி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications