Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனிக்கு பிறகு சிஎஸ்கே கேப்டன் யார்? நடப்பு தொடரிலேயே முக்கிய முடிவு.. போட்டியில் 3 வீரர்கள்

சென்னை: ஐபிஎல் 15வது சீசன் வரும் 26ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சூரத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

நடப்பு சீசனில் தோனி தான் கேப்டனாக செயல்படுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஆனால் எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு இப்போதே அடுத்த கேப்டனை அறிவித்து விடலாம் என்று தோனி முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

தோனி முடிவு

தோனி முடிவு

இதற்காக தான் ஐபிஎல் தக்கவைக்கும் பட்டியலில் தமக்கு முன்னுரிமை வழங்காமல் ஜடேஜாவுக்கு 16 கோடி ரூபாயை கொடுத்துவிட்டு, தமக்கு 12 கோடி ரூபாய் போதும் என்று தோனி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.தோனிக்கு பிறகு ரெய்னா என்ற காலம் போய் தற்போது அந்த இடத்திற்கு ஜடேஜா வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஜடேஜா

ஜடேஜா

தோனி அணியில் இருக்கும் போதே ஜடேஜாவை தயார் படுத்த முடிவு எடுத்துள்ளதாகவும், நடப்பு சீசனிலேயே, அவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகி கொண்டு, ஜடேஜாவுக்கு முன்னுரிமை வழங்கலாம் என்றும் தெரிகிறது. எனினும் இது சிஎஸ்கே வின் வியாபாரத்தை பாதிக்கும் என்பதால் அந்த முடிவு கெடுப்பில் போடப்பட்டுள்ளது.

ருத்துராஜ்

ருத்துராஜ்

இந்த நிலையில் ஜடேஜாவுக்கும் வயது 33 ஆகி விட்டது. இதனால் தொடக்கத்திலேயே ஒரு இளம் வீரரை அணியில் கேப்டனாக நியமித்துவிடலாம் என ஸ்ரீனிவாசன் நினைக்கிறார். அவர் மனதில் 2 வீரர்கள் தான் உள்ளனர். அதிலில் முதலாவதாக இருப்பவர் ருத்துராஜ் கெய்க்வாட். நல்ல பேட்ஸ்மேன், கிரிக்கெட் அறிவு இருப்பதால் ருத்துராஜை தோனி இருக்கும் போதே தயார்படுத்தலாம் என யோசிக்கிறார்.

Recommended Video

Suresh Raina enter Gujarat Titans for IPL 2022 ? | Oneindia Tamil
தீபக் சாஹர்

தீபக் சாஹர்

ஸ்ரீனிவாசன் மனதில் இருக்கும் இன்னொரு வீரர் தீபக் சாஹர். இனி நீ தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு தான் விளையாடுவாய் என்று ஸ்ரீனிவாசன் தம்மிடம் கூறியதாக தீபக் சாஹர் அன்மையில் பேட்டி ஒன்றில் கூறினார். தற்போது ஆல்ரவுண்டராக விளங்கும் தீபக் சாஹர், கேப்டனாகவும் ஜொலிப்பார் என சிஎஸ்கே நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இதனால் தான் அவருக்கு 14 கோடி ரூபாய் வரை சிஎஸ்கே நிர்வாகம் செலவு செய்துள்ளது.

Story first published: Wednesday, March 2, 2022, 16:23 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+