Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.20 லட்சம் முதல் 10 கோடி வரை!! மெகா ஏலத்தில் கவனம் பெற்ற 3 இளம் வீரர்கள்.. மோதிக்கொள்ளும் அணிகள்

ஐபிஎல் மெகா ஏலத்தில் குறைந்த அடிப்படை தொகையில் உள்ள 3 வீரர்கள், மிகப்பெரும் தொகைக்கு ஏலம் போவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்ட நிலையில், மெகா ஏலத்தில் பெரியளவில் ஏலம் எடுக்க காத்துள்ளன.

இந்திய வீரர்கள் ஆதிக்கம்

இந்திய வீரர்கள் ஆதிக்கம்

இந்த முறை மெகா ஏலத்திற்காக 590 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதில் 370 இந்திய வீரர்களும், 220 அயல்நாட்டு வீரர்களும் ஆகும். வழக்கமாக அயல்நாட்டு வீரர்களுக்கு தான் ஐபிஎல் ஏலத்தில் பெரிய மவுசு இருக்கும். ஆனால் இந்த முறை இந்திய வீரர்களின் ஆதிக்கம் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் மெகா ஏலத்தில் ரூ. 20 லட்சம் என குறைந்த அடிப்படை தொகையை கொண்ட 3 வீரர்கள், ரூ. 10 கோடி வரை ஏலம் போவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.

U 19 கேப்டன்

U 19 கேப்டன்

U 19 உலகக்கோப்பை தொடரில் தற்போது இந்திய அணியை வழிநடத்தி வருபவர் யாஷ் துல். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி 37 - 2 என திணறிய போது அட்டகாசமான சதமடித்து காப்பாற்றினார். இதற்கு முன்னர், பயிற்சி போட்டியில் 2 அரைசதங்கள், முதல் லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு 82 ரன்கள் அடித்து வியக்கவைத்துள்ளார். எனவே எதிர்கால கேப்டனாகவும் இவரை மனதில் வைத்து பல அணிகளும் ஏலம் எடுக்க போட்டிப்போடும்.

முன்னாள் ஆர்சிபி வீரர்

முன்னாள் ஆர்சிபி வீரர்

ஆந்திராவை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ். பரத் உள்நாட்டு போட்டிகளில் அடட்காசமான ஃபார்மில் உள்ளார். 28 வயதாகும் இவர் கடந்த விஜய் ஹசாரே தொடரில் 5 போட்டிகளில் 370 ரன்களை விளாசினார். இதில் தொடர்ச்சியாக 161*, 156 என சதங்கள் அடித்தார். கடந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய கே.எஸ்.பரத் 8 போட்டிகளில் 191 ரன்கள் அடித்திருந்தார்.

மிடில் ஆர்டரில் கடினமான சூழலிலும் எந்தவித அழுத்தமும் இல்லாமல் நிதானமாக விளையாடி ரன் குவிக்கும் திறமைக்காகவே பல அணிகளும் போட்டிப்போடுகின்றன. இவர் டெல்லிக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றுக்கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 டான்மே

டான்மே

ஐதராபாத்தை சேர்ந்த ஓப்பனிங் வீரரான டான்மே அகர்வால் சையது முஷ்டக் அலி கோப்பையில் அதிக கவனத்தை ஈர்த்தவர். வெறும் 7 போட்டிகளில் 334 ரன்களை குவித்து அசத்தினார். இதில் 4 அரைசதங்களும் அடங்கும். அந்த தொடரில் ஐதராபாத் அணி அரையிறுதி வரை முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர் டான்மே அகர்வால் தான். பல்வேறு அணிகளுக்கும் இளம் ஓப்பனர் ஒருவர் தேவைப்படுவதால், இவரை குறிவைக்க காத்துள்ளன.

Recommended Video

IPL 2022: Royal challengers Bangalore Has Kept 20 Crore For Shreyas Iyer' - Aakash Chopra
எதிர்கால வீரர்கள்

எதிர்கால வீரர்கள்

மேற்குறிப்பிட்ட 3 வீரர்களும் தற்போது அடிப்படை தொகையாக ரூ. 20 லட்சத்திற்கு பதிவு செய்துள்ளனர். இவர்களை ரூ. 10 கோடி வரையாவது செலவு செய்து எடுத்துவிட அணிகள் முயன்று வருகின்றன. ஏனென்றால் அடுத்த மெகா ஏலம் நடைபெறுமா என்பது சந்தேகம் தான். எனவே எதிர்காலத்தை மனதில் வைத்து அனைத்து அணிகளும் செயல்படவேண்டியுள்ளது.

Story first published: Monday, February 7, 2022, 16:42 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+