For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கேவின் 3 பிரச்சினைகளுக்கு தீர்வு.. தோனி எடுத்த அதிரடி முடிவு.. அடுத்த போட்டியில் பெரும் மாற்றம்

மும்பை: சென்னை அணியில் நிலவி வரும் 3 முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண தோனி அதிரடி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சீசனின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தாண்டு தொடக்கமே சரிவாக உள்ளது.

இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலுமே சென்னை அணி தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் 3 போட்டிகளில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.

 3 சிக்கல்கள்

3 சிக்கல்கள்

சென்னை அணியின் மிகப்பெரிய பலமே ஒரே ப்ளேயிங் 11-க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வெற்றி பெறுவது தான். ஆனால் 3 போட்டிகளிலும் சிஎஸ்கே 3 விதமான ப்ளேயிங் 11-ஐ வைத்தும் தோல்வியை தழுவியது. இதற்கு 3 பிரச்சினைகள் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

தோனி மீட்டிங்

தோனி மீட்டிங்

கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது ருதுராஜ் கெயிக்வாட் படு மோசமாக சொதப்பி வருகிறார். அவரின் ஸ்கோர் 0, 1, 0 மட்டுமே ஆகும். மற்றொரு ஓப்பனரான உத்தப்பா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக ஆடினார். எனவே நல்ல தொடக்கத்தை கொடுக்கும்படி அவர்கள் இருவருக்கும் தனி மீட்டிங் நடத்தி தோனி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

 இளம் வீரர் வருகை

இளம் வீரர் வருகை

2வது பிரச்சினை சிறப்பான பவுலிங் இல்லாதது தான். தீபக் சஹார் இன்னும் வரவில்லை. ஆடம் மில்னேவும் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பண்டே ஆகியோருக்கு வாய்ப்பு தந்து ரன்கள் பறிபோகிறது. இதனால் கோபத்தில் உள்ள தோனி, தனது கடைசி ஆயுதமான ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை களமிறக்க திட்டமிட்டுள்ளார்.

முக்கிய பிரச்சினை

முக்கிய பிரச்சினை

அணியின் மிக முக்கிய பிரச்சினை, யார் கேப்டன் என்பது தான். ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் ஜடேஜா கேப்டன்சி செய்யும் நிலையில் திடீர் திடீரென தோனி அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். இதனால் அணி வீரர்களே குழப்பத்தில் யார் சொல்வது எனத் தெரியாமல் சொதப்புகின்றனர். எனவே இதனை சரி செய்ய, இனி முழு பொறுப்பையும் ஜடேஜாவிடம் தர தோனி முடிவெடுத்துள்ளார்.

Story first published: Monday, April 4, 2022, 20:31 [IST]
Other articles published on Apr 4, 2022
English summary
CSK Problems ( சிஎஸ்கேவின் பிரச்சினைகள் ) நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதற்கு 3 முக்கிய பிரச்சினைகள் காரணமாக பார்க்கப்படுகிறது. அதனை சரிசெய்ய தோனி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+