Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவுக்கு பொருந்தும் 3 ஓப்பனர்கள்.. ஐபிஎல் மெகா ஏலத்தில் தோனியின் டார்கெட்..ஸ்டார் வீரரும் உண்டு

சென்னை: சிஎஸ்கே அணியின் திட்டத்திற்கு பொருந்தவுள்ள 3 ஓப்பனர்களை தோனி தேர்வு செய்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெகா ஏலத்தில் முதன்மை தேர்வாக ஓப்பனரை ஏலம் எடுக்க காத்துள்ளது.

4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால் ருதுராஜ் கெயிக்வாட்டை வைத்துக்கொண்டு டூப்ளசிஸை கழட்டிவிட்டது.

ஓப்பனிங் வீரர் யார்?

ஓப்பனிங் வீரர் யார்?

எனவே டூப்ளசிஸின் இடத்திற்கு அவரை போன்றே அனுபவமும், அதிரடியும் கலந்த வீரர் தேவைப்படுகிறார். ஏனென்றால் ஒரு புறம் அதிரடி மற்றொரு புறம் நிதானமாக பார்ட்னர்ஷிப் கொடுத்து ஆடியதே கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் சிறப்பான தொடக்கத்திற்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் அதற்கேற்ற 3 ஓப்பனிங் வீரர்களை சிஎஸ்கே டார்கெட் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாலன்

மாலன்

இங்கிலாந்து அணிக்காக 3வது வீரராக களமிறங்கி வருபவர் டேவிட் மாலன். ஆனால் எந்த வரிசையில் வேண்டுமானாலும் அவர் சிறப்பாக செயல்பட்டு ரன்களை குவிக்கிறார். கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணியில் அவருக்கு சரிவர வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நிலையான ரன் குவிப்பில் ஈடுபட்டு அணிக்கு உதவுவார். இதுமட்டுமல்லாமல் ஓப்பனிங்கில் வலது கை, இடது கை ஜோடி கிடைக்கும்.

கவாஜா

கவாஜா

ஆஸ்திரேலிய வீரரான உஷ்மான் கவாஜா பிபில் தொடரில் அட்டகாசமாக விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்த ஆஷஸ் தொடரில் சதமடித்து அசத்தினார். இவர் ஏற்கனவே தோனியின் கீழ் புனே அணிக்காக விளையாடிய அனுபவம் உள்ளவர். டி20 கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் உள்ள வீரர் என்பதால் சிஎஸ்கேவுக்கு உதவுவார்.

மீண்டும் டூப்ளசிஸ்

மீண்டும் டூப்ளசிஸ்

ருதுராஜ் கெயிக்வாட் - டூப்ளசிஸ் ஜோடி அமைத்துக்கொடுத்த அடித்தளம் தான் கடந்த சீசனில் சிஎஸ்கேவின் பல வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது. கடந்த சீசனில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் டாப் 5 இடங்களுக்குள் உள்ளனர். எனவே இவரையே மீண்டும் அணிக்குள் கொண்டு வரவும் சிஎஸ்கே திட்டம் போட்டு வருகிறது.

Story first published: Monday, February 7, 2022, 22:14 [IST]
Other articles published on Feb 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+