Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்- 5 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வந்த மும்பை, சிஎஸ்கே ஆதிக்கம்- சொதப்பலுக்கு காரணம் என்ன?

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆதிக்கம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

Recommended Video

IPL 2022: 5 வருடத்திற்கு பிறகு முடிவுக்கு வந்த CSK, Mumbai அணிகளின் ஆதிக்கம்.. யார் காரணம்?

இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆனால், நடப்பு சீசனில் அனைத்தும் முடிவுக்கு வந்தது. இதற்கு காரணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ஆதிக்கத்திற்கு முடிவு

ஆதிக்கத்திற்கு முடிவு

ஐபிஎல் வரலாற்றில் 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடைசியாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் 2017,2019,2020 என மூன்று முறையும், சிஎஸ்கே 2018, 2021 என 2 முறையும் மாறி மாறி சாம்பியன் பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்தியது. தற்போது ஒரு வழியாக ஆதிக்கத்திற்கு முடிவு வந்துள்ளது.

மெகா ஏலத்தால் ஆப்பு

மெகா ஏலத்தால் ஆப்பு

இதற்கு காரணமாம் ஐபிஎல் மெகா ஏலம் தான் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் தங்களுக்கு என ஒரு பலமான அணியை தயாரித்தது . ஆனால் மெகா ஏலம் என்ற பெயரில் இரு அணிகளும் தங்களது முக்கிய வீரர்களை இழந்தனர். இதன் காரணமாக புதிய அணிகளை கட்டமைக்கும் நிலைக்கு சிஎஸ்கே, மும்பை தள்ளப்பட்டனர்.

முக்கிய வீரர்கள் காயம்

முக்கிய வீரர்கள் காயம்

இதே போன்று நடப்பு சீசனில் இரு அணிகளுக்கும் காயம் ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்தது. சிஎஸ்கே அணியில் தீபக் சாஹர், ஆலன் மிலின், ஜடேஜா, மொயின் அலி, பிராவோ போன்ற முக்கிய வீரர்கள் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் போனது பெரிய இழப்பை தந்தது. இதே போன்று மும்பை அணியிலும் சூர்யகுமார் யாதவ், ஜோப்ரா ஆர்ச்சர் போன்றோர் விலகியது பின்னடைவாக கருதப்படுகிறது.

சொதப்பிய வீரர்கள்

சொதப்பிய வீரர்கள்

சரி, முக்கிய வீரர்கள் இல்லை என்றாலும் இருக்கிற வீரர்கள் யாரும் சரியான ஃபார்மில் இல்லை. ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, ஜடேஜா போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணிக்கும், ரோகித் சர்மா, இஷான் கிஷன், பொலார்ட் ஆகியோர் மும்பை அணிக்கும் சொதப்பியதால், குறைந்தபட்சம் பிளே ஆப்க்கு கூட இரு அணிகளால் முன்னேற முடியவில்லை. அடுத்த சீசனிலாவது இரு அணிகளும் வெற்றி பாதைக்கு திரும்புமா என்று பொறுத்து இரந்து பார்க்கலாம்.

Story first published: Friday, May 13, 2022, 10:48 [IST]
Other articles published on May 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+