சிஎஸ்கே vs கொல்கத்தா போட்டி.. அறிமுகமாகும் 5 இளம் வீரர்கள்.. முதல் போட்டியிலேயே அதீத சுவாரஸ்யம்!!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் 5 இளம் வீரர்கள் அறிமுகமாகி கவனம் ஈர்க்கவுள்ளனர்.
இந்தாண்டின் முதல் போட்டி மார்ச் 26ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ளது. சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மெகா ஏலம் நடைபெற்றதால், இந்தாண்டு, பல இளம் வீரர்களும் வாய்ப்பு பெறும் சூழல் உருவாகியுள்ளது. அதில் டாப் 5 வீரர்களை பார்க்கலாம்.

அங்குல் ராய்
கொல்கத்தா அணியில் விளையாடும் அங்குல் ராய், கடந்த 2018ம் ஆண்டில் இருந்து மும்பை அணியில் இருந்து வந்தார். எனினும் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. வருண் சக்கரவர்த்திக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர் இல்லை எனக்கூறப்படுகிறது. மேலும் பேட்டிங்கிலும் லோயர் ஆர்டரில் சிறப்பாக செயல்படுகிறார்.

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர் ஹங்கர்கேகர். 19 வயதே ஆகும் இவர், U19 உலகக்கோப்பையில் கலக்கியுள்ளார். தீபக் சஹார் பாதி தொடரில் விளையாட மாட்டார் என்பதால், அவரின் இடத்தில் ஹங்கர்கேகர் விளையாடவுள்ளார். பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே அட்டகாசம் செய்யும் இவருக்கு தோனியே ஸ்பெஷல் வகுப்பு எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஹரி நிஷாந்த்
டிஎன்பிஎல் 2021ம் ஆண்டு தொடரில் அதிக ஸ்கோர் அடித்த வீரர் ஹரி நிஷாந்த் தான். 9 போட்டிகளில் 368 ரன்களை குவித்தார். ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக உள்ள இவரை கடந்த 2020ம் ஆண்டே சிஎஸ்கே வாங்கியது. எனினும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மொயீன் அலி முதல் போட்டியில் இல்லாததால், இந்தாண்டு அவரின் திறமையை காட்ட தோனி வாய்ப்பு தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபிஜீத்
கொல்கத்தா அணி ஆண்ட்ரே ரஸலை மட்டுமே ஃபினிஷராக நம்பியிருந்தது. ஆனால் இந்தாண்டு அபிஜீத் என்ற மற்றொரு அதிரடி ஆட்டக்காரரை களமிறக்கியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த இவர், பேட்டிங் வரிசையில் எங்கு வேண்டுமானாலும் களமிறங்கி அதிரடி காட்டக்கூடியவர். முக்கியமாக பேக் ஃபுட் ஷாட்களில் ராஜாவாக இருக்கிறார். இவரை ரூ. 40 லட்சம் செலவழித்து எடுத்துள்ள கேகேஆர், முதல் போட்டியிலேயே வாய்ப்பு தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

அஷோக்
கொல்கத்தா அணியின் பவுலிங் படை மிகவும் அனுபவமில்லாதவர்களாக உள்ளனர். உமேஷ் யாதவ் மட்டுமே சீனியராக இருக்கிறார். அந்தவகையில் வேகப்பந்துவீச்சாளரான அசோக் ஷர்மா, முதல் ஆட்டத்திலேயே வாய்ப்பு பெறலாம். பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் இவரை ரூ.55 லட்சத்திற்கு கொல்கத்தா எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications