Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐ.பி.எல் 2022: அணியில் தக்க வைக்கப்படும் வீரர்கள்.. வீரர்களுக்கான ஊதியம் இதுதான்.. புதிய அறிவிப்பு!

டெல்லி: உலகில் அதிக வருமானம் பார்க்கும் கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடராகும். 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சமீபத்தில் அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அடுத்த ஆண்டு 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடக்கவிருக்கிறது. இதில் ஆமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படுவதால் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயரவுள்ளது.

மெகா ஏலம்

மெகா ஏலம்

புதிய அணிகளின் வரவு காரணமாக இந்த முறை மெகா ஏலம் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுகிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்? ஏலத்தில் எவ்வளவு தொகை செலவிடலாம்? வீரர்களை கழற்றி விடுவதற்கான கெடு உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் அமலுக்கு வர உள்ளன. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம்(பி.சி.சி.ஐ) ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.

4 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதி

4 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதி

தற்போதுள்ள 8 அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும். இந்த 4 வீரர்களில் 3 பேர் இந்தியர், ஒருவர் வெளிநாட்டவர் அல்லது 2 இந்தியர், 2 வெளிநாட்டவர் என்ற அடிப்படையில் இருக்கலாம். இரண்டு புதிய அணிகளும் மெகா ஏலத்துக்கு முன் அதிகபட்சமாக 3 வீரர்களைத் தேர்வு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இரண்டு புதிய அணிகளும் வெளியிடப்பட்ட வீரர்களின் பட்டியலிலிருந்தோ அல்லது வேறு இடங்களிலிருந்தோ 3 வீரர்களை டிசம்பர் 1 முதல் தேர்வு செய்யலாம். புதிய அணிகளுக்கான 3 வீரர்களின் தொகுப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு டிசம்பர் 25-க்குள் முடிந்து விடும்.

2 வெளிநாட்டு வீரர்கள்

2 வெளிநாட்டு வீரர்கள்

தற்போதுள்ள 8 அணிகள் 3 இந்திய வீரர்களுக்கு மேல் தக்க வைக்க முடியாது, அதே சமயம் 2 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் தக்கவைக்க முடியாது. ஒவ்வொரு அணியும் ஏலத்தில் வீரர்களை வாங்க முன்பு ரூ.85 கோடி செலவிட்டன. அது ரூ.90 கோடியாக உயர்த்தப்படும். ஒரு அணி 4 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டால், முதல் வீரருக்கு ரூ. 15 கோடியுடன் மொத்தம் ரூ.42 கோடி மொத்த தொகையில் இருந்து கழிக்கப்படும்.

Recommended Video

Indian Team-ன் நிலைக்கு IPL தான் காரணம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்
ரூ.33 கோடி

ரூ.33 கோடி

ஒரு அணி 3 வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் ரூ.33 கோடி கழிக்கப்படும். முந்தைய சீசன்களில் தக்கவைக்கப்படும் 3 வீரர்களுக்கு முறையே ரூ.15 கோடி, ரூ.11 கோடி, ரூ.7 கோடி வீதம் ஊதியமாக ஒதுக்கப்பட்டது. இந்த முறை அணிகளின் தக்க வைக்கப்படும் 2 வீரர்களுக்கு முறையே ரூ.14 கோடி, ரூ.10 கோடி ஒதுக்கப்படும். ஒரு வீரரை மட்டும் தக்கவைத்துக்கொள்ளும் அணிகள் அவருக்கு ரூ.14 கோடி செலுத்த வேண்டும்.

Story first published: Monday, November 1, 2021, 19:43 [IST]
Other articles published on Nov 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+