Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெய்னாவுக்கு நேர்ந்த அதே நிலை.. சிஎஸ்கே - ஜடேஜா விவகாரத்தில் மர்மம்..முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து

மும்பை: சிஎஸ்கே அணிக்கும் ஜடேஜாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது என முன்னாள் வீரர் பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளது.

அதுவும் சுரேஷ் ரெய்னாவை போன்றே ஜடேஜாவையும் சிஎஸ்கே புறக்கணித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஜடேஜாவின் விலகல்

ஜடேஜாவின் விலகல்

தோனியிடம் கேப்டன்சியை ஒப்படைத்தவிட்ட பின்னர் ஜடேஜா கேப்டன்சியில் இருந்து முதலில் விலகினார். அதன்பின்னர் ப்ளேயிங் 11ல் அவர் இடம்பெறவில்லை. தற்போது காயம் எனக்கூறி ஐபிஎல் தொடரில் இருந்தே விலகியுள்ளார். இதனால் சிஎஸ்கேவுக்கும் - ஜடேஜாவுக்கும் கேப்டன்சி விவகாரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது எனக்கூறப்படுகிறது.

 சிஎஸ்கேவின் நடவடிக்கை

சிஎஸ்கேவின் நடவடிக்கை

இதனை உறுதி செய்யும் வகையில் தான் ஜடேஜாவை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்தது சிஎஸ்கே அணி. கடந்தாண்டு சுரேஷ் ரெய்னாவும் இதே போன்று தான் முதலில் ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் அணியில் இருந்தே நீக்கப்பட்டார். இதனை ஒப்பிட்டு ரசிகர்கள் கூறி வருகின்றனர். எனினும் இதற்கு சிஎஸ்கே தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனியரின் கருத்து

சீனியரின் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து கூறியுள்ளார். அதில், ரவீந்திர ஜடேஜா அடுத்தாண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடுவது சந்தேகம் தான். சென்னை அணியில் வீரர்கள் விலகுவது, காயம் காரணமாக நீக்கப்படுவது போன்ற விஷயங்கள் எப்போதுமே மர்மமாகவே தான் இருக்கிறது.

Recommended Video

IPL 2022 CSK vs MI: முரட்டுத்தனமான மோதல்! Predictable 11 என்ன? | OneIndia Tamil
ரெய்னாவின் நிலைமை

ரெய்னாவின் நிலைமை

சுரேஷ் ரெய்னா விவகாரத்தில் சர்ச்சை எழுந்தது குறித்து இன்று வரை முழுமையான தகவல் கிடைக்கவில்லை. ஜடேஜா விவகாரமும் அப்படிதான் இருக்கும் என நினைக்கிறேன். ரெய்னாவுக்கும், நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு என்று தகவல் வெளியானவுடன் ரெய்னா நீக்கப்பட்டார். தற்போது ஜடேஜா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உடன், அணியிலிருந்து விலகியுள்ளார். இதெல்லாம் ஒத்துப்போகிறது எனக்கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 12, 2022, 19:51 [IST]
Other articles published on May 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+