
காலியான நடுவரிசை
டெல்லி அணியின் பேட்டிங் தான் அந்த அணிக்கு பெரும் குறையாக இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, டெல்லி அணியின் நடுவரிசை காலியாக இருப்பதாக தெரிவித்தார். கேப்டன் ரிஷப் பண்ட்டின் பேட் இன்னும் பேசவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

ரிஷப் பண்ட் செயல்பாடு
ரிஷப் பண்ட் நடப்பு சீசனில் 5 போட்டியில் 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக குஜராத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 43 ரன்கள் விளாசியுள்ளார். இது குறித்து பேசிய ரிஷப் பண்ட், கடைசி போட்டியில் 17 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். ஆனால் அவரால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை,

என்ன திட்டம்?
ரிஷப் பண்ட் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும். சதம் விளாச வேண்டும். அவர் 70, 80 ரன்கள் அடித்தால் தான் வெற்றி பெற முடியும். டெல்லி அணியில் போவெல்லை மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் அவர் இதுவரை பேசும் படி ஏதும் செய்யவில்லை. சர்ஃபிராஸ் கான் நன்றாக விளையாடுகிறார். ஆனால் அவரை ஏன் அணியிலிருந்து நீக்கினார்கள் என்று தெரியவில்லை.
Recommended Video

ஏன் சேர்க்கவில்லை?
இதே போன்று அண்டர் 19 கேப்டன் யாஷ் துல், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யாஷ் துல்லையும் டெல்லி அணி இன்னும் பயன்படுத்தாது ஏன் என்று தெரியவில்லை. டெல்லி அணியின் ஒரே பலம் தொடக்கம் மட்டும் தான். ஆனால் அனைத்து போட்டியிலும் அவர்களால் ரன் குவிக்க முடியாது. நடுவரிசை வீரர்கள் செயல்பட்டே ஆக வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications