Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மண்டமேல இருந்த கொண்டைய மறந்துட்டோமே” ஆர்சிபி செய்த பெரும் தவறு.. ப்ளேயிங்11 சிக்கலை கூறிய சீனியர்

மும்பை: ஆர்சிபி அணி மெகா ஏலத்தில் ஒரே ஒரு விஷயத்தை யோசிக்காததால் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என ஆர்சிபி தீவிரமாக களமிறங்குகிறது.

இதற்காக மெகா ஏலத்தின் போது ஒவ்வொரு வீரரையும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு தேர்வு செய்துள்ளது.

ஆர்சிபியின் தவறு

ஆர்சிபியின் தவறு

எனினும் "மண்டை மேல் இருக்கும் கொண்டைய மறந்துட்டோமே" என்பது போன்ற கதை ஆகியுள்ளது. தென்னாப்பிரிக்க வீரர் டூப்ளசிஸை ரூ.6 கோடி கொடுத்து எடுத்துள்ளதால் அவர் தான் இனி கேப்டன் எனத்தெரிகிறது. இதனால் டூப்ளசிஸ், கோலி, மேக்ஸ்வெல் என டாப் ஆர்டர் மிகவும் பலமாக உள்ளது. ஆனால் மிடில் அர்டரில் தான் பிரச்சினையே என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

விளக்கிய சோப்ரா

விளக்கிய சோப்ரா

இதுகுறித்து பேசிய அவர், ஓப்பனிங்கில் டூபளசிஸ் - கோலி உள்ளனர். முதல் விக்கெட்டிற்கு க்ளென் மேக்ஸ்வெல் உள்ளார். ஆனால் நம்பர் 4வது வீரராக அணியில் நம்பிக்கையான பேட்ஸ்மேன் யார் இருக்கிறார்? மீண்டும் மிடில் ஆர்டரில் பிரச்சினையில் தான் ஆர்சிபி சிக்கியிருக்கிறது. 5வது இடத்திற்கு கூட தினேஷ் கார்த்திக்கை வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவரின் ஃபார்மே சற்று மோசமாக உள்ளதால் மிடில் ஆர்டர் பலவீனமாக இருக்கும்.

ரூதர்ஃபோர்ட் இருப்பாரா

ரூதர்ஃபோர்ட் இருப்பாரா

ஆர்சிபியில் செர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் இருக்கிறார். அவரை ப்ளேயிங் 11ல் சேர்க்க முடிந்தால் மிடில் ஆர்டரில் பிரச்சினை இல்லை. ஆனால் சேர்ப்பது கடினமான ஒன்று. ஏனென்றால் அதிகபட்சமாக 4 அயல்நாட்டு வீரர்கள் தான் இருக்க வேண்டும். டூப்ளசிஸ், மேக்ஸ்வெல், ரூதர்ஃபோர்ட் என 3 பேர் பேட்டிங்கிற்கு உதவினால் பவுலிங்கிற்கும் 2 அயல்நாட்டு வீரர்கள் கட்டாயமாக தேவை என்ற சூழலில் ஆர்சிபி இருக்கிறது.

 ஸ்பின்னர்கள் இல்லை

ஸ்பின்னர்கள் இல்லை

அணியில் தரமான இந்திய ஸ்பின்னர்கள் இல்லை. கார்ன் ஷர்மா மட்டுமே இருக்கிறார். இவரும் நம்பிக்கை தரும்படி இல்லாததால் தான் வானிண்டு ஹசரங்கா மீது அதீத நம்பிக்கை வைத்து அதிகத்தொகைக்கு எடுத்துள்ளனர். எனவே அவரை ப்ளேயிங் 11ல் ஆட வைக்க வேண்டிய நிர்பந்தம் கடுமையாக உள்ளது.

ஹாசல்வுட்டின் நிலைமை

ஹாசல்வுட்டின் நிலைமை

ஒருவேளை ஹசரங்காவை 4வது அயல்நாட்டு வீரராக சேர்த்தால், வேகப்பந்துவீச்சில் முழு முழுக்க இந்திய வீரர்களை பயன்படுத்தி ஆக வேண்டும். அதன்படி அவர்களிடம் ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் உள்ளனர். 3வது பவுலராக ஆட வைக்க முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ஹாசல்வுட் இருக்கிறார்.

Recommended Video

IPL 2022 Auction: 10-crore club, Salary hikes and cuts | OneIndia Tamil
அதுவா? இதுவா? சூழல்

அதுவா? இதுவா? சூழல்

இதனால் ரூதர்ஃபோர்ட்-ஐ களமிறக்கினால், வேகப்பந்துவீச்சில் ஹாசல்வுட் இல்லாமல் பலவீனமாகும் அல்லது ஹசரங்கா இல்லாமல் சுழற்பந்துவீச்சு பலவீனமாகும். ஒருவேளை ரூதர்ஃபோர்டை உட்காரவைத்தால், மிடில் ஆர்டரில் பேட்டிங் பெரிதும் பாதிக்கப்படும். இப்படி பேட்டிங், சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என சிறந்த இந்திய வீரர்கள் இல்லாததால் ஆர்சிபி சிக்கலில் உள்ளது.

Story first published: Friday, February 18, 2022, 14:47 [IST]
Other articles published on Feb 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+